சியோமி கே 20 ஸ்மார்ட்போன் : மே 28ம் தேதி வெளியாகிறது

சமீபத்தில் ரெட்மீ நிறுவனம், புதிதாக வெளிவரப்போகும் இந்த போனில் 48 எம்.பி. கொண்டுள்ள சோனி கேமரா இடம் பெறும் என்று அறிவித்திருந்தது. 

By: Updated: May 27, 2019, 04:23:32 PM

Xiaomi Redmi K20 Pro Specifications, Price, Launch, and Availability : சீனாவில் வெளியாகிறது சியோமியின் கே 20 ப்ரோ ஸ்மார்ட்போன். மே மாதம் 28ம் தேதி இந்த போன்கள் வெளியாக இருந்த நிலையில், இந்த போனின் விலை குறித்த தகவல்கள் இணைய தளத்தில் லீக்காகி உள்ளன.

ஸ்நாப்ட்ராகனின் 855 ப்ரோசசரைக் கொண்ட முதல் ரெட்மீ போன் இது என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளது கே 20 ப்ரோ.  கே சீரியஸில் உருவாகியுள்ள கே 20 மற்றும் கே 20 ப்ரோ போன்கள் ஒரு தினத்தில் வெளியாக உள்ளது. தற்போது சியோமி கே 20 ஸ்மார்ட்போன் ஸ்நாப்ட்ராகன் 700 ப்ரோசசரை பயன்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : மூன்று பின்பக்க கேமராக்களுடன் வெளியாகும் விவோவின் அட்டகாசமான ஸ்மார்ட்போன்!

Xiaomi Redmi K20 Pro Specifications குறித்து வெளியான தகவல்கள்

லீக்கான தகவல்களின் அடிப்படையில் 6GB RAM மற்றும் 64GB இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட கே 20 போனின் விலை யுவான் 2,599 (ரூபாய் 26000) என்றும் , ரெட்மீ கே 20 (6GB/128GB) போனின் விலை யுவான் 2,799 (ரூ. 28000) கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரெட்மீ நிறுவனம், புதிதாக வெளிவரப்போகும் இந்த போனில் 48 எம்.பி. கொண்டுள்ள சோனி கேமரா இடம் பெறும் என்று அறிவித்திருந்தது.

இதுவரையிலும் வெறும் இளஞ்சிவப்பு நிறத்தில் மட்டுமே காட்சி அளித்துக் கொண்டிருந்த ரெட்மியின் கே 20 ப்ரோ தற்போது புதிய நீல நிற வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் ஸ்நாப்ட்ராகன் 730 ப்ரோசசரில் இயங்கக்கூடியது என்றும், 4000 mAh பேட்டரியை கொண்டது என்றும், 48 எம்.பி. செயல்திறன் கொண்ட செல்ஃபி கேமராவைப் பெற்றுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Xiaomi redmi k20 pro specifications price launch and availability in india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X