ஜனவரி 10-ல் வெளியாகிறது ரெட்மியின் புதிய போன்கள்...

ரெட்மி நோட் 7 போன்கள் மிகவும் அழகான இரண்டு இளஞ்சிவப்பு நிறங்களில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Xiaomi Redmi launch event on January 10 : ஜனவரி 10ம் தேதி ரெட்மி ஈவெண்ட்டினை நடத்துகிறது சியோமி போன். பெய்ஜிங் நகரில் நடைபெறும் இந்த ஈவெண்ட்டில் ரெட்மி 7 மற்றும் ரெட்மி நோட் 7 என இரண்டு போன்களும் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Xiaomi Redmi launch event on January 10 என்னென்ன போன்கள் வெளியாகின்றன ?

ரெட்மி சீரியஸில் ஹையர் எண்ட் போன்கள் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 7 போன்கள் மிகவும் அழகான இரண்டு இளஞ்சிவப்பு நிறங்களில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் படிக்க : 2019ம் ஆண்டில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்

ரெட்மி நோட் 7 போனின் சிறப்பம்சங்கள்

மாடல் நம்பர் M1901F7C-ஐ கொண்டுள்ள இந்த போனின் அளவு 159.21 × 75.21 × 8.1(mm)

6.3 இன்ச் ஃபுல் எச்.டி. டிஸ்பிளேவினை கொண்டுள்ளது இந்த போன்

பேட்டரி சேமிப்புத் திறன் 3900 mAh ஆகும்

டூயல் ரியர் கேமராவை கொண்டிருக்கிறாது இந்த போன்.

ரெட்மி ப்ரோ 2 போனும் இந்த விழாவில் அறிமுகமாகலாம். 48 எம்.பி ரியர் கேமராவை கொண்டுள்ளது.

இந்த மூன்று போன்களின் அறிமுக விழாவானது ஜனவரி 10ம் தேதி இந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு நடக்கும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close