சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் எப்படியிருக்கும்? அதன் சிறப்பம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள்

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ரெட்மி நோட் 5 குறித்த சிறப்பம்சங்களை இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

By: Published: February 4, 2018, 4:00:51 PM

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ரெட்மி நோட் 5 குறித்த சுவாரஸ்யமான தகவல்கள், அதன் சிறப்பம்சங்களை targetyoutube.com என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

அந்த இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 18:9 நீள-அகல விகிதம்கொண்ட டிஸ்பிளேவைக் கொண்டதாகவும், செங்குத்தாக அமைக்கப்பட்ட டூயல் ரியர் கேமராவுடன் இருக்கும். மேலும், அந்த ஸ்மார்ட்போன் மிகவும் மெல்லிய மேற்பகுதி மற்றும் அடிப்பகுதிகளைக் கொண்டிருக்கும்.

ரெட்மி நோட் 5 இரு வெவ்வேறு மாடல்களில் வெளியாக உள்ளது. சியோமி எம்இஇ7எஸ் மற்றும் எம்இடி7எஸ். இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் இயங்குதளத்தில் இயங்கக்கூடியதாக இருக்கும் என அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களின் விலை தோராயமாக ரூ.15,069 மற்றும் ரூ.18,000-ஆக இருக்கலாம்.

ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் 5.99 இன்ச் முழு எச்.டி டிஸ்பிளேவுடன் 2160*1080 பிக்சல் தீர்மானத்தை உடையதாக இருக்கும். மேலும், ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர் இயங்குதளத்தைக்கொண்ட ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டதாகவும், ஸ்னாப்டிராகன் 636 பிராசஸரைர் இயங்குதளத்தைக்கொண்ட ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க கேமரா 16எம்பி+5 எம்பி-ஐக் கொண்டிருக்கும். முன்பக்க கேமரா 8 எம்பி-ஐக் கொண்டிருக்கும்.

பிப்ரவரியின் இறுதியில் பார்சிலோனாவில் நடைபெறக்கூடிய மொபைல் வார்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் ரெட்மி நோட் 5 வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Technology News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Xiaomi redmi note 5 renders leaked likely to come with 189 bezel less design and dual cameras

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X