scorecardresearch

பிப்ரவரியில் வெளிவருகிறது ரெட்மி நோட் 5!

இந்தியாவில் 32 ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 5 யின் விலை 15,000 ரூபாய் வரையிலும், 64 ஜிபி மெமரி கொண்ட மொபைலின் விலை 18,000 ரூபாய் வரையில் விற்பனையாகும்

Redmi-Note-5

மொபைல் பிரியர்களின் கவனத்தை பெற்ற, சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 மாடல் ஸ்மார்ட்ஃபோன், பிப்ரவரி மாதம் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் வாரந்தோறும், நூற்றுக்கணக்கான போன்கள் சந்தையில் விற்பனைக்கு வந்தாலும், அதை முந்திக் கொண்டும் வாங்கும் பழக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதற்கேற்ப, பல்வேறு மொபைல் நிறுவனங்களும் பயனாளர்களை கவர செல்ஃபி கேமிரா, அதிக மெமரி ஸ்பேஸ், ஹெச்டி டிஸ்ப்ளே என்று புதுமையான ஸ்பேசிஃபிகேஷன்களை புகுத்தி தொடர்ந்து மொபைல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 மாடல் மொபைல் பிரியர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மொபைல் வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் இந்தியாவில் விற்பனையாகும் என்று அதிகார்ப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரெட்மி நோட் 5 யின் சிறப்பமசங்கள்:

*5.99 இன்ச், 18:9 ஹெச்டி டிஸ்ப்ளே
*3 ஜிபி ரேமில் 32ஜிபி மேமரி ஸ்பேஸ்
*4ஜிபி ரேமில் 64ஜிபி மேமரி ஸ்பேஸ்
*பின்புறம் 16+5 டூயல் மெகாபிக்சல் சென்ஸார் கேமரா
*முன்புறம் 8 மெகாபிக்சல் சென்ஸார் கேமரா
*4,000 மேகா பேட்டரி
*7.1 ஆன்ராய்ட் வெர்ஷன்
*ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார்

இந்தியாவில் 32 ஜிபி மெமரி ஸ்பேஸ் கொண்ட ரெட்மி நோட் 5 யின் விலை 15,000 ரூபாய் வரையிலும், 64 ஜிபி மெமரி ஸ்பேஸ் கொண்ட மொபைலின் விலை 18,000 ரூபாய் வரையில் விற்பனையாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Xiaomi redmi note 5 specifications reportedly leaked might launch by end of february