/tamil-ie/media/media_files/uploads/2018/11/redmi-note6pro-copy.jpg)
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ
சியோமி போனின் புதுவரவாக இன்று வெளியாகியுள்ளது சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ. இன்று சீனாவில் வெளியாகி இருக்கும் இந்த போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலைப் பற்றி ஒரு பார்வை.
இன்று காலை இந்திய நேரப்படி சரியாக 11.30 மணி அளவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. தாய்லாந்தில் இந்த போனின் விலை 6990 Thai baht ஆகும். இந்தியாவில் இதன் விலை 15, 450 ரூபாய்க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், இந்த சீரியஸ்ஸில் இதற்கு முன்பு வெளியான ரெட்மீ நோட் 5க்கு இன்றும் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் இந்த போன் தாய்லாந்தில் வெளியானது.
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.26 அங்குல ஃபுல் எச்.டி திரை மற்றும் இதன் ஸ்க்ரீன் ஃபார்மட் ரேசியோ 19:9 ஆகும்.
- 636 ஸ்நாப்ட்ராகன் சிப்செட்டுடன் வெளியாகிறது இந்த போன்.
- இதன் இயங்குதளம் ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ ஆகும். பேட்டரி பவர் 4000mAh ஆகும்.
- 4ஜிபி / 64ஜிபி மற்றும் 6ஜிபி/64ஜிபி என்ற இரண்டு வேரியேசன்களுடன் வெளியாகிறது இந்த போன்கள்.
- ஃபேஸ் அன்லாக் சிறப்பம்சங்களுடன் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேமராக்கள்
இந்த போனில் இரட்டை பின்பக்க கேமராக்கள் மற்றும் முன்பக்க கேமராக்கள் உள்ளன. முன்பக்க கேமராக்கள் இரண்டும் போனின் நோட்ச் பகுதியில் இணைக்கப்பட்டிருக்கின்றது. பின்பக்க கேமரா 12MP+5MP செயல்திறன்களுடன் வெளிவர உள்ளன.
செல்பி கேமராக்கள் 20MP+2MP செயல்திறன்களுடன் வெளியாகின்றன. தாய்லாந்தில் இந்த போன் கறுப்பு, சிவப்பு, நீலம் மற்றும் ரோஸ் கோல்ட் நிறங்களில் வெளியாகியுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.