Xiaomi Redmi Note 7 : பிப்ரவரி மாதம் 28ம் தேதி விற்பனைக்கு வருகிறது சியோமியின் புதிய போனான ரெட்மி நோட் 7. ஏற்கனவே சீனாவில் வெளியாகி 1 மில்லியன் போன்கள் விற்றுத் தீர்த்த நிலையில், இந்தியாவில் இதன் அறிமுகத் தேதியினை அறிவித்திருக்கிறார் அனூஜ் சர்மா.
DO NOT keep calm, #ǝɟᴉ7ƃnɥʇ will be unveiled on 28th Feb 2019!
Register to buy the ticket for the launch event: https://t.co/T9Ftv1Med9. Limited seats!
4800 RTs and we’ll giveaway #RedmiNote7. pic.twitter.com/XpXhRZbcCy— Redmi India (@RedmiIndia) 14 February 2019
அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாரத்தில் போன்களை விற்பனைக்கு கொண்டு வருவது சியோமியின் வழக்கம் என்பதால், இந்த போன்களை நீங்கள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம்.
சீனாவில் வெளியான இந்த போனின் விலை 999 யுவான் ஆகும். இந்தியா ரூபாயில் 10,400 விற்பனையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் 48எம்.பி. செயல்திறன் கொண்ட போன் இதுவாக இருக்கலாம்.
Xiaomi Redmi Note 7 சிறப்பம்சங்கள்
முன்பு பிளாஸ்டிக் அல்லது மெட்டல் சேசீஸ்டுடன் வெளியான போன்களுக்கு மாற்றாக தற்போது க்ளாஸ் மற்றும் மெட்டல் சாண்ட்விச் வடிவமைப்பில் வெளியாகியுள்ளது.
6.3 இன்ச் அளவுள்ள திரை
ட்விலைட் கோல்ட், பேண்டசி ப்ளூ, மற்றும் ப்ரைட் பிளாக் போன்ற நிறங்களில் வெளியாகிறது இந்த போன்.
ஸ்நாப்ட்ராகன் 660 ப்ரோசசருடன் கூடிய அட்ரெனோ 512 கிராபிக்ஸ் கார்ட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
4000 mAh நான் ரிமூவபிள் பேட்டரியுடனும், குயிக்சார்ஜ் 4.0 தொழில்நுட்பத்துடனும் இந்த போன் வெளியாகியுள்ளது.
டைப்-சி யூ.எஸ்.பி சார்ஜர்
48 எம்.பி. முதன்மை கேமரா, மற்றும் 5 எம்.பி. இரண்டாம் கேமரா போனின் பின்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்பி கேமரா 13 எம்.பி. ஆகும்.
Sony IMX586 sensor 48 எம்.பி. கேமராவை கொண்டுள்ளது இந்த போன் என்பது குறிப்பிடத்தக்கது.