Advertisment

48MP கேமராவை கொண்டுள்ள சியோமி ரெட்மி நோட் 7-ன் விலை இவ்வளவு தானா ?

Sony IMX586 sensor 48 எம்.பி. கேமராவை கொண்டுள்ளது இந்த போன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Xiaomi Redmi Note 7

Xiaomi Redmi Note 7

Xiaomi Redmi Note 7  - ரெட்மி எப்போதும் பட்ஜெட் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி தங்களின் புதிய போன்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் மிட் ரேன்ஞ்ச் பிரீமியம் போன்களை வெளியிட்டு வருகிறது. கடந்த வருடத்தின் தொடக்கத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோவினை வெளியிட்டு அனைவரையும் அசத்தியது. வருடத்தின் பிற்பாதியில் ரெட்மி நோட் 6 ப்ரோவும் வெளியானது.

Advertisment

மிகவும் குறுகிய காலத்தில் நோட் சீரியஸில் புதிய போனை சீனாவில் வெளியிட்டுள்ளது ரெட்மீ நிறுவனம்.

Xiaomi Redmi Note 7 போன் எப்படி இருக்கிறது ?

48 எம்.பி. செயல்திறன் கொண்ட கேமரா, வாட்டர் ட்ராப் ஸ்டைல் நோட்ச் டிஸ்பிளே, 4000mAh பேட்டரி என புதிதான சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது இந்த போன்.

இந்த போனின் ப்ரோ வேரியண்ட்டும் தற்போது லிஸ்ட்டில் உள்ளது. ஆனால் பிப்ரவரி மாதத்தில் வரும் சீனாவின் புத்தாண்டு தினத்தில் தான் இந்த போன் வெளியாகும்.

Xiaomi Redmi Note 7  போனின் விலை

மூன்று வேரியண்ட்டுகளில் வெளியாகும் இந்த போன்களின் விலையும் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு உகந்த வகையில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

3ஜிபி ரேம் / 32 ஜிபி இண்ட்ர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 999 யுவான் (ரூ. 10,000)

4ஜிபி ரேம் / 64 ஜிபி இண்ட்ர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 1,199 யுவான் (ரூ. 12,000)

6ஜிபி ரேம் / 64 ஜிபி இண்ட்ர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 1,299 யுவான் (ரூ. 14,000)

இந்த போன் எப்போது மற்ற நாடுகளில் கிடைக்கும் என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க : மீண்டும் பட்ஜெட் வாடிக்கையாளர்கள் பக்கம் திசை திரும்பும் சாம்சங்

Redmi Note 7 இதர சிறப்பம்சங்கள்

முன்பு பிளாஸ்டிக் அல்லது மெட்டல் சேசீஸ்டுடன் வெளியான போன்களுக்கு மாற்றாக தற்போது க்ளாஸ் மற்றும் மெட்டல் சாண்ட்விச் வடிவமைப்பில் வெளியாகியுள்ளது.

6.3 இன்ச் அளவுள்ள திரை

ட்விலைட் கோல்ட், பேண்டசி ப்ளூ, மற்றும் ப்ரைட் பிளாக் போன்ற நிறங்களில் வெளியாகிறது இந்த போன்.

ஸ்நாப்ட்ராகன் 660 ப்ரோசசருடன் கூடிய அட்ரெனோ 512 கிராபிக்ஸ் கார்ட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

4000 mAh நான் ரிமூவபிள் பேட்டரியுடனும், குயிக்சார்ஜ் 4.0 தொழில்நுட்பத்துடனும் இந்த போன் வெளியாகியுள்ளது.

டைப்-சி யூ.எஸ்.பி சார்ஜர்

48 எம்.பி. முதன்மை கேமரா, மற்றும் 5 எம்.பி. இரண்டாம் கேமரா போனின் பின்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்பி கேமரா 13 எம்.பி. ஆகும்.

Sony IMX586 sensor 48 எம்.பி. கேமராவை கொண்டுள்ளது இந்த போன் என்பது குறிப்பிடத்தக்கது.

Xiaomi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment