/tamil-ie/media/media_files/uploads/2019/10/EGxpcR4UwAAbiRz.jpg)
Xiaomi Redmi Note 8 Pro specifications, price, launch
Xiaomi Redmi Note 8 Pro specifications, price, launch : ரெட்மீ நோட் ப்ரோ வகை ஸ்மார்ட்போன்களுக்கு என்றுமே நல்ல மதிப்பு தான். காரணம் நோட் 5 ப்ரோவில் பொறுத்தப்பட்ட கேமரா தான். குறைந்த விலையில் அனைவருக்கும் ஏற்ற ஒரு ஸ்மார்ட்போனை, அதுவும் சிறப்பாக புகைப்படம் எடுக்கும் ஒரு கேமராவை கொண்ட ஸ்மார்போனை மிகவும் குறைந்த விலையில் வழங்கியது சியோமி நிறுவனம். அதன் பின்பு ரெட்மீ ஸ்மார்போன்களுக்கான மார்க்கெட் இந்தியாவில் வளரத் துவங்கியது.
பட்ஜெட் வாடிக்கையாளர்களின் நிரந்தர தீர்வாக இருந்து வருகிறது இந்த ஸ்மார்ட்போன். 6 ப்ரோ மற்றும் 7 ப்ரோ மக்களின் எதிர்பார்ப்பை அதிக அளவு பூர்த்தி செய்யவில்லை என்ற நிலையில் சீனாவில் நோட் 8 ப்ரோ வெளியாகியுள்ளது. நிச்சயமாக இந்த ஸ்மார்ட்போன் மக்களின் எதிர்பார்க்கை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன். இதன் விலை ரூ.14,000 ஆக இருக்கலாம்.
சிறப்பம்சங்கள்
நான்கு பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது. 64MP+8MP+2MP+2MP என்ற செயல்திறனுடன் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : பப்ஜி விளையாடவே வருகிறது கேமிங் ஸ்மார்ட்போன்
செல்ஃபி கேமரா செயல்திறன் 20 எம்.பி. ஆகும்.
கேமிங்கிற்காக மீடியா டெக் ஹெலியோ ஜி90டி இதில் பொருத்தப்பட்டுள்ளது.
4,500mAh பேட்டரியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட சார்ஜர் உருவாக்கப்பட்டுள்ளது.
6.53 இன்ச் ஃபுல் எச்.டி திரையுடன் வெளி வரும் போனின் ரெசலியூசன் 2340 x 1080 பிக்சல்களாகும்.
அஸ்பெக்ட் ரேசியோ 19.5:9
கார்னிங் கொரில்லா க்ளாஸ் 5 ஸ்மார்போனின் முன் மற்றும் பின்பக்கம் பொறுத்தப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இண்டெர்நெல் ஸ்டொரேஜூம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.