Advertisment

64 எம்.பி. கேமராவுடன் அறிமுகமாகிறதா சியோமியின் ரெட்மி நோட் 8?

Xiaomi Redmi Note 8 Smartphone with 64MP camera : சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரியஸ் ஸ்மார்ட்போனிலும் இந்த கேமரா பொருத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Xiaomi Redmi Note 8 Smartphone with 64MP camera

Xiaomi Redmi Note 8 Smartphone with 64MP camera

Xiaomi Redmi Note 8 Smartphone with 64MP camera :  சமீபமாக ரியல்மீ தன்னுடைய முதல் 64எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் சியோமியும் 64எம்.பி.  கேமரா ஸ்மார்ட்போனில் தன்னுடைய பெயரை இணைத்துக் கொண்டது.

Advertisment

7ம் தேதி வெளியாக இருக்கும் சியோமியின் அந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 8 ஆக இருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் அறிவிக்கின்றன. ஆகஸ்ட் 7ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியாகிறது. ஒரு நாள் காத்திருங்கள்... அதன் பின்பு, எந்த போன் தான் 64எம்.பி கேமராவுடன் வெளியாகிறது என்று அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க : “உலக தொழில்நுட்ப வரலாற்றில் முதன்முறையாக” - வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரியல்மீ

சீனாவின் மிகப்பெரிய சமூக வலைதளமான வெய்போவில் சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது அந்நிறுவனம். அந்த அறிவிப்பில் நாள் மற்றும் லோகோ ஆகியவை இடம் பெற்றிருந்தது. அந்த அறிவிப்பினை ரெட்மியின் ஜெனரல் மேனேஜர் லூ வெய்பிங் சீன மொழியில் வெளியிட்டிருந்தார். ஆங்கிலத்தில் அது, ரெட்மி நோட் 8 முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஸ்டாராங்காக வெளிவர உள்ளது என்று அர்த்தம்.

Xiaomi Redmi Note 8 Smartphone with 64MP camera

ரெட்மி நோட் சீரியஸ் குறிப்பிட்ட கால இடைவெளியிலேயே  புதிய போன்களை அறிமுகம் செய்வது ஒன்றும் புதிதில்லை. இந்த ஆண்டின் துவக்கத்தில் ரெட்மீ நோட் 7 வெளியானது. ரெட்மீ நோட் 7 ப்ரோ பிப்ரவரியில் வெளியானது.

இந்த ஸ்மார்ட்போனில் வர இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த எந்த தகவல்களும் இல்லை. ஆனால் 48 எம்.பி. செயல்திறன் கொண்ட சோனியின் IMX586 கேமரா சென்சாரை முதன்முதலாக பயன்படுத்தியது. எனவே 64 எம்.பி. செயல்திறன் கொண்ட Samsung ISOCELL Bright GW1 சென்சாரையும் இந்த நிறுவனமே பயன்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ரியல்மீயின் 64 எம்.பி. ஸ்மார்ட்போன் 8ம் தேதி வெளியாக உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரியஸ் ஸ்மார்ட்போனிலும் இந்த கேமரா பொருத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi Xiaomi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment