/tamil-ie/media/media_files/uploads/2019/01/RedmiPro2_LAUNCH_1.jpg)
Xiaomi Redmi Pro 2
Xiaomi Redmi Pro 2 : ஹானர் கடந்த வாரம் 48எம்.பி. கேமராவுடன் புதிய ஸ்மார்ட்போன் (ஹானர் வியூ20) ஒன்றை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து, மோட்டோ நிறுவனத்தின் புதிய போனின் ஸ்மார்ட்போன் (மோட்டோ P40) சிறப்பம்சங்கள் லீக்கானது. அதிலும் 48 எம்.பி. கேமராவும், இன்-ஹோல் செல்ஃபி கேமராவும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஒரு ஸ்மார்ட்போன் 48 எம்.பி கேமராவுடன் வெளிவருகிறது.
Xiaomi Redmi Pro 2 சிறப்பம்சங்கள்
ரெட்மி ப்ரோ 2 என்ற பெயரில் வெளியாகும் இந்த போனில் குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 675 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஹையர் எண்ட் போனான இந்த போன் சீனா மார்க்கெட்டில் மட்டுமே வெளியாக இருக்கிறது. இந்தியாவில் இந்த போன் வெளியாகது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி ப்ரோ போன் கடந்த 2016ம் ஆண்டு வெளியானது. அதன் ஆரம்ப விலை 15000 ஆகும். ரெட்மி ப்ரோ ப்ளஸ் போனின் விலை 20,000க்கும் விற்றது. மூன்று பின்பக்க கேமராக்களுடன, இன்ஹோல் செல்ஃபி கேமராவுடன் இந்த போன் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : ஹானர்வியூவை காப்பி அடித்த மோட்டோ ஸ்மார்ட்போன்
Redmi 7 சீரியஸ் போன்கள்
ரெட்மீ 7 சிரியஸ்ஸில் தற்போது மூன்று புதிய போன்கள் வெளியாக உள்ளாதாக தகவல்கள் கிடைத்துள்ளது. M1901F7E, M1901F7T and M1901F7C போன்கள் ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ அடிப்படையாக உருவாக்கப்பட்ட 5.84 இன்ச் ஃபுல் எச்.டி.+ எல்.சி.டி திரையுடன் வெளியாக உள்ளது.
4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி/128ஜிபி இண்டர்நெல் ஸ்டோரெஜ்ஜூடன் வெளியாக உள்ளது இந்த போன். 12 எம்.பி ரியர் கேமரா மற்றும் 8 எம்.பி செல்பி கேமராவும் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.