32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் ஒரு ஸ்மார்ட்போன்… அதுவும் ஆச்சரியப்படும் விலையில்!

மிகக் குறைந்த வெளிச்சத்திலும் தரமான செல்ஃபிகள் எடுக்க இயலும் என்ற உத்திரவாதத்தை தருகிறது இந்த ஸ்மார்ட்போன்

Xiaomi Redmi Y3 Specifications
Xiaomi Redmi Y3 Specifications

Xiaomi Redmi Y3 Specifications :  32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் இன்று வெளியானது சியோமியின் ரெட்மி Y3 ஸ்மார்ட்போன். 3GB/32GB and 4GB/64GB என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் வெளியாகிறது. இந்த பட்ஜெட் ஃப்ரெண்ட்லி போன் டெல்லியில் அறிமுகமானது.

இன்று பகல் 12 மணி முதல் அமேசான், Mi.Com, மற்றும் சியோமியின் அவுட்லெட்டுகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன இந்த ஸ்மார்ட்போன்கள்.

Xiaomi Redmi Y3 Specifications

இதில் ஸ்நாப்ட்ராகன் 632 ப்ரோசசர் பொருத்தப்பட்டுள்ளது

EIS சப்போர்ட்டுடன் கூடிய 32 எம்.பி. செல்ஃபி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.

2 பின்பக்க கேமராக்கள் மற்றும் 4000 mAh செயல்திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது.

டிஸ்பிளே சைஸ் 6.26 இன்ச் எச்.டி. ஆகும். அஸ்பெக்ட் ரேசியோ 19:9

கார்னிங் கோரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பு

12 எம்.பி+2 எம்.பி பின்பக்க கேமரா செட்டப்

ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் ப்யூட்டிஃபை 4.0 டெக்னாலஜியுடன் கூடிய செல்ஃபி கேமரா

மிகக் குறைந்த வெளிச்சத்திலும் தரமான செல்ஃபிகள் எடுக்க இயலும் என்ற உத்திரவாதத்தை தருகிறது இந்த ஸ்மார்ட்போன்

Redmi Y3 price

3GB/32GB வேரியண்ட்டின் விலை ரூ.9,999

4GB/64GB வேரியண்ட்டின் விலை ரூ.11,999

போல்ட் ரெட், எலகெண்ட் ப்ளூ, மற்றும் ப்ரைம் ப்ளாக் நிறங்களில் வெளியாகின்றன

மேலும் படிக்க : மோட்டோவின் ஃபோல்டபிள் போன் எப்படி இருக்கும் ? லீக்கானது ஃபர்ஸ்ட் லுக்!

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Xiaomi redmi y3 specifications reviews price and availability in india

Next Story
மோட்டோவின் ஃபோல்டபிள் போன் எப்படி இருக்கும் ? லீக்கானது ஃபர்ஸ்ட் லுக்!Moto Razr foldable Smartphone
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com