Xiaomi Redmi Y3 : 32 எம்.பி. செயல்திறன் கொண்ட சியோமியின் ரெட்மி போன் Y3 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதம் 24ம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளது. ரெட்மி நிறுவனத்தின் ஒய் சீரியஸில் புதிய போன் ஒன்று வெளியாக இருப்பதாக அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அந்த போனின் அறிமுக நிகழ்வானது வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி நடைபெற உள்ளது. அந்த ட்வீட்டில் ஒய் சீரியஸில் தான் போன் வெளியாகப் போகின்றதா என்பது தொடர்பாக எதையும் கூறவில்லை ஆனால் ஒய் மட்டும் மறைமுகமாக தங்களின் வாடிக்கையாளர்களுக்கு எதையோ கூறும் விதமாக இருந்தது.
சியோமி வெளியிட்ட ட்வீட்
"Y should selfies be less detailed? Y can’t we change the way we look at them?” - இது தான் அந்த ஒய் சீரியஸ் மர்மத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
சியோமியின் ஒய்2 போனிற்கு அடுத்தபடியாக வெளியாக இருக்கும் இந்த போனின் செல்ஃபி கேமராவில் பெரிய அளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பழைய போனில் 16 எம்.பி. கேமரா பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் இந்த போனில் 32 எம்.பி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சியோமி இந்தியாவின் தலைவர் மனு குமார் ஜெய்ன் வெளியிட்ட புதிய போனின் டீசரில் நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோவின் நோட்ச் காட்டப்பட்டிருந்தது. இதனால் வரப்போகும் புதிய போனில் டாட் நோட்ச் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : வாடிக்கையாளர்களுக்கு சோகமான செய்தியை அறிவித்த ஓப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம்!