க்ஸியோமி நிறுவன சாதனங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரிமுறை அமலானதை தொடர்ந்து விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக க்ஸியோமியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரிமுறை அமலானதை தொடர்ந்து Mi பவர் பேங்க், Mi பிஸ்னஸ் பேக்பேக், Mi சார்ஜர், யு.எஸ்.பி. ஃபேன் மற்றும் பல்வேறு ஸ்மார்ட்போன் கேஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது. பவர் பேங்க் தயாரிக்க புதிய ஆலையை துவங்கியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜி.எஸ்.டி. கவுன்சில் ஜி.எஸ்.டி. கட்டணங்களை குறைத்துள்ளதை தொடர்ந்து Mi விரும்பிகளுக்கு நாங்களும் விலையை குறைக்கிறோம். இனி உங்களுக்கு பிடித்த சாதனத்தை நீங்கள் விரும்பிய தொகை செலுத்தி வாங்க முடியும் என க்ஸியோமி Mi ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளது.
விலை குறைந்துள்ள சாதனங்கள்:
* 10,000 எம்.ஏ.எச். Mi பவர் பேங்க் 2 ரூ.1,199இல் இருந்து தற்சமயம் ரூ.1,099க்கு விற்பனை செய்யப்படுகிறது
* 10,000 எம்.ஏ.எச். Mi பவர் பேங்க் ப்ரோ ரூ.1,599இல் இருந்து தற்சமயம் ரூ.1,499க்கு விற்பனை செய்யப்படுகிறது
* 20,000 எம்.ஏ.எச். Mi பவர் பேங்க் 2 ரூ.2,199இல் இருந்து தற்சமயம் ரூ.1,999க்கு விற்பனை செய்யப்படுகிறது
* Mi பிஸ்னஸ் பேக்பேக் விலை ரூ.1,499இல் இருந்து தற்சமயம் ரூ.1,299க்கு விற்பனை செய்யப்படுகிறது
* Mi சார்ஜர் 5V / 2S அவுட்புட் ரூ.399-இல் இருந்து தற்சமயம் ரூ.349க்கு விற்பனை செய்யப்படுகிறது
* Mi கார் சார்ஜர் ரூ.799-இல் இருந்து தற்சமயம் ரூ.699க்கு விற்பனை செய்யப்படுகிறது
* யு.எஸ்.பி. கேபிள் ரூ.199-இல் இருந்து தற்சமயம் ரூ.179க்கு விற்பனை செய்யப்படுகிறது
* 2-இன்-1 யு.எஸ்.பி. கேபிள் ரூ.299-இல் இருந்து தற்சமயம் ரூ.249க்கு விற்பனை செய்யப்படுகிறது