சாம்சாங் நிறுவனத்தாலும் நிகழ்த்த முடியாத சாதனை… இந்தியாவில் சாம்ராஜ்யம் அமைக்கும் சியோமி!

Vivo Smartphone shares in India : இந்த வருட இறுத்திக்குள் சாம்சங் நிறுவனத்தின் இடத்தை விவோ நிச்சயம் பிடித்துவிடும்

Xiaomi Redmi 9 smartphone specifications, price, sales, availability
Xiaomi Redmi 9 smartphone specifications, price, sales, availability

Xiaomi Smartphone shares in India : சாம்சங் ஸ்மார்ட்போனிற்கு இந்திய மார்கெட்டில் என்றும் ஒரு தனியிடம் இருக்கிறது. வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து ஸ்மார்ட்போன்களை வெளியிட தவறியதால் தான் என்னவோ எச்.டி.சி போன்ற பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மார்க்கெட்டில் நிலைத்து நிற்கவில்லை.

Xiaomi Smartphone shares in India

இந்திய ஸ்மார்ட்போன்கள் மார்க்கெட்டில்  முதல் இடத்தில் இருப்பது யார் என்று கேட்டால் அது சியோமி தான். கடந்த 8 காலாண்டுகளில் இந்தியாவில் அசைக்க முடியாத அளவிற்கு தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தை அமைத்துள்ளது சியோமி நிறுவனம். இரண்டாம் காலாண்டில் மட்டும் மொத்தம் 10.3 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்று தீர்த்துள்ளது சியோமி. கடந்த காலாண்டினை விட 30 மடங்கு இதன் பங்குகள் அதிகரித்துள்ளன.

Samsung smartphones market shares in India

இரண்டாம் இடத்தில் சாம்சங் உள்ளது. இந்திய மார்க்கெட்டில் 22% பங்குகளை கொண்டுள்ளது சாம்சங் நிறுவனம். இந்த இரண்டாம் காலாண்டில் சாம்சங் நிறுவனம் 7.3 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளது.

மேலும் படிக்க : சியோமியின் அசத்தலான கேமிங் ஸ்மார்ட்போன் ப்ளாக் ஷார்க் 2 ப்ரோ… இந்தியாவில் வெளியீடு எப்போது?

Vivo smartphones market shares in India

ஆனால் தற்போது சாம்சங்கின் இடத்தை அடித்து காலி செய்து விடுவேன் என்ற வேகத்தில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது விவோ நிறுவனம். 2019ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் 5.8 மில்லியன் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளது விஓவ் நிறுவனம். முதல் காலாண்டில் 15% இருந்த பங்குகள் தற்போது 18%மாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு இதன் பங்குகள் வெறும் 10% மட்டுமே.

Oppo and Realme smartphone shares in India

9% பங்குகளுடன் ஓப்போ நிறுவனம் நான்காவது இடத்திலும் 8% பங்குகளுடன் ரியல்மீ 5வது இடத்திலும் உள்ளது. இந்த தகவல்களை கேனலிஸ் (Canalys analyst) என்ற அனலைஸிங் சிஸ்டம் வெளியிட்டுள்ளது. இந்த வருட இறுத்திக்குள் சாம்சங் நிறுவனத்தின் இடத்தை விவோ நிச்சயம் பிடித்துவிடும் என்றும் இந்த அனலைஸிங்கில் அறிவித்துள்ளது கேனலிஸ்.

மேலும் படிக்க : பைக் ரேஸ்க்கு தயாரா? சவாலுக்கு அழைக்கிறது டி.வி.எஸ் நிறுவனம்!

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Xiaomi smartphone shares in india remains at the top for 8th consecutive quarters

Next Story
சியோமியின் அசத்தலான கேமிங் ஸ்மார்ட்போன் ப்ளாக் ஷார்க் 2 ப்ரோ… இந்தியாவில் வெளியீடு எப்போது?Xiaomi Gaming Smartphone Black Shark 2 Pro specifications, Xiaomi Black Shark 2 Pro specifications
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com