அட்டகாசமான வடிவத்தில் ஜியோமி டிவி இந்தியாவில் அறிமுகம்!

ஜியோமி மி டிவி 4ஏ சிறந்த தேர்வாக இருக்கும் என்று அந்நிறுவனர் மனுயூ குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜியோமி நிறுவனத்திக்ல் புதிய மாடல் டிவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொழில்நுட்ப உலகில் பல்வேறு முயற்சிகளை செய்து வரும் ஜியோமி நிறுவனம், டிவி உலகில் புதிய மாற்றங்களை செய்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம் பட்ஜெட் விலையில், ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த டிவி குறித்த எதிர்பார்ப்புகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. 32 இன்ச் மி டிவி 4ஏ இந்தியாவில் மிக விரைவில் வரவுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.12,990 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சாதராண குடும்ப பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவி வாங்க, ஜியோமி மி டிவி 4ஏ சிறந்த தேர்வாக இருக்கும் என்று அந்நிறுவனர் மனுயூ குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜியோமி மி டிவி 4ஏ வில் இடம்பெற்றுள்ள சிறப்மசங்கள்:

>1366×768 பிக்சல் எச்டி டிஸ்பிளே
>32-இன்ச் எச்டி ஸ்கிரீன்
> 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர்
>1ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரி
>2 x 5 வாட் ஸ்பீக்கர்
>எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0,
>வைபை வசதி
>டால்பி விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட்
>எம்ஐயூ டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு

×Close
×Close