Advertisment

இஸ்ரோவுடன் இணைந்த சியோமி... இந்த சிறப்பம்சம் வேறெந்த போனிலும் கிடையாது!

பேரிடர் மேலாண்மை, வாகனங்களை ட்ராக் செய்வது, நேவிகேஷன் மற்றும் ஆட்டோமொபைல் சிஸ்டங்களில் இது பயன்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இஸ்ரோவுடன் இணைந்த சியோமி... இந்த சிறப்பம்சம் வேறெந்த போனிலும் கிடையாது!

Xiaomi’s Redmi Note 9 Pro series supports NaVIC  ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் வெளியானது. இரண்டு வேரியண்ட்டுகளில் வெளியான இந்த மாடலின் முக்கிய அம்சங்கள் இதோ உங்களுக்காக.  ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 மேக்ஸ் என இரண்டு ஸ்மார்ட்போன்களின் மிகப்பெரிய வேறுபாடே இதில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் தான். ப்ரோ மாடல் 48 எம்.பி. கேமராக்களுடன் வெளியாகியுள்ளது. மேக்ஸ் மாடலோ 64 எம்.பி. பிரைமரி கேமராவுடன் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 720ஜியில் இயங்குகிறது.

Advertisment

இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கிய சிறப்பம்சமாக நாவிக் NaVIC என்ற நேவிகேசனல் சிஸ்டம் தான். இந்த சிஸ்டம் இந்தியாவின் நேவிகேசனல் சிஸ்டம் ஆகும். இந்தியா தன்னுடைய நேவிகேஷனல் தேவைக்காக உருவாக்கிய சேட்டிலைட் சிஸ்டத்தின் ஆப்பரேசனல் பெயர் தான் நாவிக். இந்த சிஸ்டமின் முழுமையான பெயர் Indian Regional Navigation Satellite System (IRNSS) என்பதாகும். இந்தியாவின் நாவிக் சிஸ்டம் செயல்பாட்டிற்கு 7 சேட்டிலைட்டுகள் இது வரை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சிஸ்டம் தொடர்பாக முழுமையான தகவல்களை ஆங்கிலத்தில் பெற

NaVIC என்றால் என்ன?

அமெரிக்கா எப்படி தங்களுக்கென சொந்தமாக ஜி.பி.எஸ் அல்லது க்ளோபல் பொசிஷனிங் சிஸ்டம் இருக்கின்றதோ அப்படியே இந்தியாவிற்கான நேவிகேஷனல் சிஸ்டம் தான் இந்த நாவிக் (NaVIC). இந்த சிஸ்டம் இந்தியாவின் மொத்த பரப்பையும் ”கவர்” செய்வதோடு மட்டுமில்லாமல் இந்தியாவுக்கு வெளியே 1500 கி.மீ அப்பாலும் இந்த சிஸ்டம் மூலமாக நேவிகேட் செய்ய இயலும். சியோமி நிறுவனம் இஸ்ரோ மற்றும் குவால்கோமோடு இணைந்து NaVIC சிஸ்டத்தை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துவதற்காக ஒப்பந்தம் கையெழுத்திட்டது. ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜிபிஎஸ், கலிலியோ, க்ளோனாஸ் போன்ற நேவிகேசனல் சிஸ்டட்டங்களை சப்போர்ட் செய்தது.

இந்த சிஸ்டம் பயன்பாட்டால் ஒருவரின் அல்லது ஒரு போனின் சரியான இடத்தினை இந்தியாவுக்குள் நேவிகேட் செய்ய முடியும் ஸ்டாண்டர்ட் பொசிசனிங் சர்வீஸ் மற்றும் என்க்ரிப்டட் ரெஸ்ட்ரிக்டட் சர்வீஸ் என பொது பயன்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான பயன்பாட்டிற்கு இந்த சேவைகள் வழங்கப்படுகிறது. பேரிடர் மேலாண்மை, வாகனங்களை ட்ராக் செய்வது, நேவிகேஷன் மற்றும் ஆட்டோமொபைல் சிஸ்டங்களில் இது பயன்படுகிறது. சிறப்பான லொகேஷன் டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு தருவதற்காக இந்த சிஸ்டம் தற்போது சியோமியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்நாப்ட்ராகனின் இந்த ப்ரோசசர் மட்டுமில்லாமல் 720ஜி, 662, மற்றும் 460 ப்ரோசசர்கள் இந்த சிஸ்டத்தினை சப்போர்ட் செய்கிறது. எனவே வருங்காலங்களில் இது போன்று பல்வேறு ஸ்மார்ட்போன்கள் நாவிக்கை சப்போர்ட் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment