உஷார்… சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்!

Xiomi fake products போலி Mi இந்தியத் தயாரிப்புகளின் மதிப்பு, பெங்களூரில் ரூ.4.9 லட்சம் மற்றும் சென்னையில் ரூ 8.4 லட்சம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

By: November 25, 2020, 9:01:09 AM

How to find Xiomi Fake Products Tamil News : ரூ.33.3 லட்சம் மதிப்புள்ள போலி Mi இந்தியப் பொருட்கள் சமீபத்தில் பெங்களூரு மற்றும் சென்னையில் கைப்பற்றப்பட்டதாக ஷியோமி தெரிவித்துள்ளது. இந்த போலி பொருட்கள் சென்னையில் நான்கு சப்ளையர்கள் மற்றும் பெங்களூரில் மூன்று சப்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன மற்றும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

மொபைல் கவர், ஹெட்ஃபோன்கள், பவர் பேங்க், சார்ஜர்கள் மற்றும் இயர்போன்கள் ஆகியவற்றைக் கொண்ட 3000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட போலி Mi இந்தியத் தயாரிப்புகளின் மதிப்பு, பெங்களூரில் ரூ.4.9 லட்சம் மற்றும் சென்னையில் ரூ 8.4 லட்சம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஷியோமி தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, போலி பொருள்களைக் கண்டறிவது கடினமாக இருக்கும். போலியான தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால், குறிப்பாக பவர்பேங்க் அல்லது சார்ஜர்கள் ஒருவரின் ஸ்மார்ட்போனுக்கு ஆழமான சேதத்தை ஏற்படுத்தும். அதனால்தான் வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனத்தில் உத்தரவாதத்தை இழப்பதைத் தவிர்ப்பதற்காக உண்மையான பிராண்டட் பாகங்கள் வாங்கப் பரிந்துரைக்கப்படுகிறது. தயாரிப்புகளை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் மனதில் கொள்ள வேண்டிய சில உதவிக்குறிப்புகளை ஷியோமி பட்டியலிட்டுள்ளது.

பாதுகாப்பு குறியீடுகள்

பவர் பேங்க்ஸ் போன்ற தயாரிப்புகள் மற்றும் நிறுவனத்தின் அனைத்து ஆடியோ தயாரிப்புகளும் ரீடெயில் (Retail) பெட்டியில் இருக்கும் பாதுகாப்பு குறியீட்டைக் கொண்டுள்ளன என்று ஷியோமி கூறுகிறது. இந்த தயாரிப்பு உண்மையானதா என்பதைப் பயனர்கள் Mi.com-ல் அங்குள்ள குறியீட்டைச் சுரண்டி சரிபார்க்கலாம். எனவே, அடுத்த முறை நீங்கள் ஷியோமியின் பவர்பேங்க் வாங்கும்போது, நிறுவனத்தின் வலைத்தளத்திற்குச் சென்று அந்தத் தயாரிப்பு உண்மையானதா என்பதைச் சரிபார்க்கவும்.

ரீடெயில் பெட்டி, Mi இந்தியா லோகோ

பொதுவாகப் போலி தயாரிப்புகளின் பேக்கேஜிங் மெலிதானதாக இருக்கும். மேலும், ரீடெயில் பெட்டி அசல் போலவே இருக்காது. ஓர் தயாரிப்பின் நம்பகத்தன்மையைச் சந்தேகித்தால், அசல் பேக்கேஜிங் சரிபார்க்க வாடிக்கையாளர்கள் எப்போதும் Mi Home அல்லது Mi Store-க்கு செல்லலாம் என்று ஷியோமி கூறுகிறது. மேலும், தயாரிப்புக்கு அசல் Mi இந்தியா லோகோ இருக்கும். எனவே அதன் பாகங்கள் ஏதேனும் வாங்கும்போது லோகோவை சரிபார்க்கவும்.

Mi பேண்ட் குறித்து, ஷியோமி எப்போதும் போலி பேண்டுடன் Mi ஃபிட் செயலி பொருந்தாது என்று கூறுகிறது. அதே நேரத்தில் ஓர் உண்மையான தயாரிப்பு எப்போதும் அவர்களின் பயன்பாட்டுடன் செயல்படும். மேலும், அங்கீகரிக்கப்படாத கேபிளும் எளிதில் உடைந்து விடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Xiomi fake power banks mi bands audio how to find original products tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X