திரைப்படங்களை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? ஆனால், அதற்காக பெரிய ஸ்மார்ட் டிவியை வாங்குவது என்பது அனைவருக்கும் சாத்தியமில்லை. இந்த ஆசையை நிறைவேற்றவே, இப்போது வீட்டுப் பயன்பாட்டிற்கான புரொஜெக்டர்கள் சந்தையில் பிரபலமாகி வருகின்றன. இந்த வரிசையில், மலிவு விலையில் அசத்தும் Episode One எனும் புதிய புரொஜெக்டரை Xming நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
பொதுவாக, புரொஜெக்டர்களைப் பயன்படுத்துவது சற்று சிக்கலாக இருக்கும். ஆனால், இந்தப் புதிய புரொஜெக்டர் அந்த சிக்கல்களை முழுவதுமாக நீக்கிவிட்டது. ஏனென்றால், இதில் கூகுள் டிவி (Google TV) வசதி உள்ளதால், நெட்ஃபிளிக்ஸ், யூடியூப் போன்ற செயலிகள் முன்பே நிறுவப்பட்டுள்ளன. இதை தனியாக இணைக்க எந்த சிரமமும் இல்லை. டிவி பார்ப்பது போலவே இதையும் எளிதாகப் பயன்படுத்தலாம்.
இந்தக் புரொஜெக்டர், உங்கள் வீட்டுச் சுவரையே ஒரு பெரிய சினிமா திரையாக மாற்றிவிடும். 3 மீட்டர் தூரத்தில் இருந்து 120 இன்ச் அளவுள்ள பிரம்மாண்ட பிம்பத்தை பார்க்க முடியும். இதில் உள்ள 1080p நேட்டிவ் ரெசல்யூஷன் வசதி, படங்களை மிகத் துல்லியமாகவும், தெளிவாகவும் காட்டுகிறது. டால்பி ஆடியோ (Dolby Audio) தொழில்நுட்பத்துடன் கூடிய இரு 3W ஸ்பீக்கர்கள், சினிமா ஹாலைப் போன்ற உணர்வை வீட்டிலேயே ஏற்படுத்தும்.
இந்தக் புரொஜெக்டர் வெறும் 1.25 கிலோ எடை மட்டுமே உள்ளதால், இதை எளிதாக எந்த இடத்திற்கும் எடுத்துச் செல்லலாம். 2GB ரேம்+16GB ஸ்டோரேஜ் வசதியுடன் வரும் இந்த புரொஜெக்டரின் விலை ரூ.29,999. குறைவான விலையில் அதிகபட்ச பொழுதுபோக்கை விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.