Advertisment

Year Ender 2024: ரூ. 25000 பட்ஜெட்டுக்குள் விற்பனை செய்யப்படும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் இவை!

Year Ender 2024: இந்த ஆண்டில் ஏராளமான ஸ்மார்ட் போன்களை, பல்வேறு நிறுவனங்கள் விற்பனைக்கு கொண்டு வந்தன. அவற்றில் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் தரமான செயல்திறன் கொண்ட டாப் 5 போன்கள் குறித்து இதில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Smartphones

இந்த ஆண்டு ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ற சிறப்பானதொரு ஆண்டாக அமைந்தது எனக் கூறலாம். அந்த அளவிற்கு ஏராளமான ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. சாம்சங், ரியல்மி, ஜியோமி ரெட்மி என பல நிறுவனங்கள் பட்ஜெட் செக்மென்டில் பல ஸ்மார்ட்போன்களை வெளியிட்டன. அந்த அடிப்படையில், ரூ. 25 ஆயிரத்திற்குள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள டாப் 5 போன்களை பரிசீலிக்கலாம்.

Advertisment

Redmi Note 14 Pro: 

ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போன் அண்மையில் விற்பனைக்கு வந்தது. இந்த போன், 8 ஜிபி ரம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டின் விலை ரூ. 24,999 ஆகும். இது 6.67 இன்ச் டிஸ்பிளே, மிடியாடெக் டைமென்சிட்டி 7300 அல்ட்ரா சிப் ப்ராஸசர், 50 மெகாபிக்ஸல் ட்ரிபிள் ரியர் கேமரா, 5500mAh பேட்டரி திறன் மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டது.

Redmi

Advertisment
Advertisement

Motorola Edge 50 Fusion:

Motorola நிறுவனம் சார்பாக கடந்த மே மாதம் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கியது. இதன் தொடக்க விலை ரூ. 22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், 6.7 இன்ச்  Full HD 3D ஒஎல்இடி டிஸ்பிளே, ஸ்நாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப் ப்ராஸசர், 50 மெகாபிக்ஸல் கேமரா மற்றும் 5000mAh பேட்டரி உள்ளிட்ட வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

Motorola

iQOO Z9s Pro:

12 ஜிபி ரம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை  ரூ. 24,999 ஆகும். ஸ்நாப்டிராகன் 7 ஜென் 3 ப்ராஸசர், 50 மெகாபிக்ஸல் கேமரா போன்ற சிறப்பம்சங்களுடன் இந்த போன் சந்தையில் கிடைக்கிறது.

IQ

Realme 13+ 5G:

இந்த போன் கடந்த ஆகஸ்ட் மாதம், ரூ. 22,999-க்கு தனது விற்பனையை தொடங்கியது. 12 ஜிபி ரம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ், 50 மெகாபிக்ஸல் கேமரா, 5000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

Realme

OnePlus Nord CE4:

ஒன்ப்ளஸ் தரப்பில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்த போனில், ஸ்நாப்டிராகன் 7 ஜென் 3 ப்ராஸசர், 5500mAh பேட்டரி, 6.78 இன்ச் அமலோட் டிஸ்பிளே, 8 ஜிபி ரம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் போன்ற அனைத்து வசதிகளும் இருக்கின்றன. இதன் விலை ரூ. 24,999 என் விற்பனை செய்யப்படுகிறது.

Oneplus

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
5G Smartphones
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment