மெட்டா நிறுவனம் ட்விட்டர் (X தளத்திற்கு) போட்டிக்கு த்ரெட்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்தது. இன்ஸ்டாகிராமுடன் இந்த செயலி இணைக்கப்பட்டதால் அறிமுகம் செய்யப்பட்ட சில நாளில் பல மில்லியன் பயனர்களைப் பெற்றது.
தொடர்ந்து த்ரெட்ஸ் புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமிற்கான அணுகலை இழக்காமல் பயனர்கள் தங்கள் த்ரெட்ஸ் கணக்கை தனியாக நீக்கலாம் என அப்பேட் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது த்ரெட்ஸ் செயலி இன்ஸ்டாகிராமுடன் இணைக்கப்பட்டதால் த்ரெட்ஸ் கணக்கை மட்டும் தனியாக நீக்க முடியாது. அப்படி நீக்கினால் பயனரின் இன்ஸ்டாகிராம் கணக்கும் நீக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில், பயனர்கள் பலரும் இதுதொடர்பாக கோரிக்கை வைத்து வந்தனர்.
அந்த வகையில் தற்போது, மெட்டா இன்ஸ்டாகிராமிலிருந்து த்ரெட்களைப் பிரிப்பதாகத் தெரிகிறது. இன்ஸ்டாகிராம் தலைவரான ஆடம் மொசெரியின் கூற்றுப்படி, இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து த்ரெட்ஸ் கணக்கை மட்டும் தனியாக நீக்கலாம். இந்த அம்சம் தற்போது அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
த்ரெட்ஸ் கணக்கை டெலிட் செய்வது எப்படி?
உங்கள் த்ரெட்ஸ் கணக்கை டெலிட் செய்ய விரும்பினால், முதலில் உங்கள் போனில் த்ரெட்ஸ் செயலி ஓபன் செய்யவும். கீழே வலதுபுறத்தில் உள்ள profile பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து ஸ்கின் மேலே வலதுபுறத்தில் தோன்றும் 2லைன் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்லவும்.
அடுத்து ‘Account’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ‘Delete or Deactivate profile’ கொடுக்கவும். ‘Deactivate Profile’ ஆப்ஷன் கொடுக்கும் போது த்ரெட்ஸ் செயலியில் நீங்கள் போஸ்ட் செய்த படங்களை archive செய்வதை உறுதி செய்யவும். ‘Delete’ ஆப்ஷன் உங்கள் இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்யாமல் த்ரெட்ஸ் செயலியை டெலிட் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“