/indian-express-tamil/media/media_files/2025/10/13/spotify-account-to-chatgpt-2025-10-13-13-20-32.jpg)
இனி சாட்ஜிபிடிதான் உங்க டீ.ஜே... ஸ்பாட்டிஃபை உடன் இணைகிறது ஏ.ஐ. அசிஸ்டென்ட்!
இசை பிரியர்களே, இனி உங்க மியூசிக் டேஸ்ட் அனைத்தையும் ஏ.ஐ. அசிஸ்டெண்ட் கவனித்துக் கொள்ளப் போகிறது. ஆம்! பிரபலமான மியூசிக் ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாட்டிஃபை உலகின் முன்னணி ஏ.ஐ. சாட்ஜிபிடி உடன் இணைந்துள்ளது. இதன் மூலம், உங்க ஸ்பாட்டிஃபை அக்கவுண்ட்-ஐ சாட்ஜிபிடி-யுடன் இணைத்து வாய் கட்டளை மூலம் நமக்கு பிடித்த ப்ளேலிஸ்ட்களை உருவாக்கலாம், புதிய பாடல்களைப் பரிந்துரைகளாகப் பெறலாம், ஏன்... இசையின் பிளேபேக்கையும் கூடக் கட்டுப்படுத்தலாம்.
ஸ்பாட்டிஃபை நிறுவனம், "இது இசையைக் கண்டறிவதை எளிதாக்குவதுடன், மிக தனிப்பயனாக்கப்பட்ட (Personalised) மற்றும் புதிய இசைக் கேட்கும் அனுபவத்தை வழங்கும்" என்று கூறியுள்ளது. இந்தச் சிறப்பு அம்சம் மொபைல் (iOS & ஆண்ட்ராய்டு) மற்றும் வெப்சைட் என அனைத்து தளங்களிலும் கிடைக்கிறது.
ஸ்பாட்டிஃபை & சாட்ஜிபிடி - இரண்டும் இணையும் மேஜிக்!
இந்த இணைப்பு உண்மையில் எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். நீங்க சாட்ஜிபிடி-யில் ஸ்பாட்டிஃபை பற்றி ஏதாவது கேட்டால், ஸ்கிரீனில் "இந்தப் பதிலுக்கு ஸ்பாட்டிஃபையைப் பயன்படுத்து" என்று ஒரு பட்டன் தோன்றும். அதைக் கிளிக் செய்து உங்க ஸ்பாட்டிஃபை அக்கவுண்ட் இணைக்கும்போது, சாட்ஜிபிடி-க்கு நீங்க விரும்பிய பாடல்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் மியூசிக் ஹிஸ்டிரி போன்ற தனிப்பட்ட தரவுகளுக்கான அணுகல் கிடைக்கும். இந்த டேட்டா பயன்படுத்தி, ஏ.ஐ. அசிஸ்டெண்ட் உங்க தனிப்பட்ட ரசனைக்கு ஏற்ற பாடல்களையும் ப்ளேலிஸ்ட்களையும் உடனடியாகப் பரிந்துரைக்கும்.
இனி உங்கள் கோரிக்கையே ப்ளேலிஸ்ட்!
உங்க விருப்பப்படி ப்ளேலிஸ்ட் உருவாக்குவது இனி மிகவும் எளிது. "வொர்க்அவுட் செய்ய ஒரு உற்சாகமான ப்ளேலிஸ்ட் போடு" அல்லது "சாலைப் பயணத்திற்கு ஏற்ற மெலடி பாடல்களைப் பரிந்துரை செய்" என்று கேட்கலாம். "ஒவ்வொரு பாடலின் தலைப்பிலும் டாக் என்ற வார்த்தை இருக்கும் ஒரு ப்ளேலிஸ்ட்டை உருவாக்கு" என்பது போன்ற வேடிக்கையான மற்றும் சவாலான கோரிக்கைகளையும் நீங்க முயற்சிக்கலாம். பரிந்துரைகள் மட்டுமல்ல, சாட்ஜிபிடி மூலமாகவே நீங்க ஸ்பாட்டிஃபை பிளேபேக்கைக் கட்டுப்படுத்தலாம், உங்க லைப்ரரியை நிர்வகிக்கலாம், கலைஞர்களை பின்தொடரலாம் மற்றும் பிரைவேட் ப்ளேலிஸ்ட்களை உருவாக்கலாம்.
தனியுரிமை கவலை தேவையில்லை!
உங்க டேட்ட தனியுரிமை குறித்து ஸ்பாட்டிஃபை தெளிவுபடுத்தியுள்ளது. அக்கவுண்ட் இணைக்கும்போது உங்க ப்ளேலிஸ்ட்கள், நீங்க பின்தொடர்பவர்கள், உங்க இருப்பிடம் போன்ற விவரங்களைச் சாட்ஜிபிடி அணுகும். ஆனால், நீங்க எப்போது வேண்டுமானாலும் உங்க அக்கவுண்ட்-ஐ துண்டித்துக் கொள்ளலாம். மிக முக்கியமாக, எந்தவொரு கலைஞர் அல்லது பாட்காஸ்ட் படைப்பாளரின் கண்டெண்ட், ஏ.ஐ-க்கு பயிற்சி அளிப்பதற்காக (Training Purposes) ஓபன் ஏ.ஐ உடன் பகிரப்படாது என்று ஸ்பாட்டிஃபை உறுதியளித்துள்ளது. எனவே, கண்டெண்ட் கிரியேட்டர்களின் படைப்புகள் பாதுகாக்கப்படுகின்றன.
இந்த அம்சம் தற்போது 145 நாடுகளில் ஆங்கில மொழியில் கிடைக்கிறது. இதில், பிரீமியம் (Premium) பயனர்கள் மிகவும் துல்லியமான மற்றும் விரிவான கோரிக்கைகளை வழங்குவதன் மூலம், முழுமையாகத் தனிப்பயனாக்கப்பட்ட தனித்துவமான பாடல்களை உருவாக்கிக் கொள்ள முடியும். இசைத் துறையை ஏ.ஐ. அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் இந்த முயற்சியில், தற்போது கேன்வா, எக்ஸ்பீடியா போன்ற வேறு சில ஆப்ஸ்களும் சாட்ஜிபிடி உடன் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.