/tamil-ie/media/media_files/uploads/2023/03/facebook-reels-90-seconds.jpg)
பேஸ்புக் தளம் ரீல்ஸ் பதிவிடும் நேரத்தை 90 நொடிகளாக மாற்றியுள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளில் பேஸ்புக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனமும் புதுபுது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்தவகையில் மெட்டா நிறுவனம் ரீல்ஸ் எனப்படும் (short vertical videos) அதிகபட்சமாக 90 நொடிகள் வரை பதிவிடலாம் என கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. மெட்டா அறிவிப்பு பேஸ்புக் தளத்திற்கும் பொருந்தும் என்பதால் கன்டென்ட் கிரியேட்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கள் படைப்பாளர்களை அதிக சுதந்திரத்துடன் வழங்க முடியும் எனக் கூறியுள்ளது.
இருப்பினும், டிக்டாக்கின் 10 நிமிட வீடியோ வரம்பை விட மிகக் குறைவாகும். டிக்டாக் அதிகபட்சமாக 10 நிமிடங்கள் வழங்குகிறது.
இதைத் தவிர பேஸ்புக் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. pre-built templates, மற்றவர்கள் உடனான memories கொண்டு ரீல்ஸ் பதிவிடும் வசதி செய்துள்ளது. வேகமாக வளரும் அம்சமாக மெட்டாவின் ரீல்ஸ் அம்சம் மாறியுள்ளது. பல்வேறு பயனர்களை ஈர்த்து வருகிறது.
Horizontal வீடியோ வசதியை விட vertical videos வரவேற்பு பெற்றுள்ளது. பல குறுகிய வீடியோ இயங்குதளங்கள் உரிமம் பெற்ற இசையைப் பயன்படுத்துவதால் அது தனித்துவமாகவும் கூடுதல் சிறப்பையும் பெறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.