/tamil-ie/media/media_files/uploads/2023/04/whatsapp-multi-phone.jpg)
WhatsApp on multiple phones
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, பலரும் எதிர்பார்த்த வாட்ஸ்அப் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை 4 மொபைல் போன்களில் பயன்படுத்தும் படி அப்டேட் வெளியிட்டுள்ளது.
இந்த அம்சம் ஏற்கனவே வாட்ஸ்அப் வேப் ( டெஸ்க்டாப்) அம்சத்தில் இருந்தாலும் தற்போது மொபைல் போன்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் அக்கவுண்ட் இணைக்கப்பட்ட 4 சாதனங்களிலும் வாட்ஸ்அப் தனித் தனியாக இயங்கும். ப்ரைமரி சாதனம் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் மற்ற சாதனங்களில் பயன்படுத்தலாம். ஆனால் 15 நாட்கள் மேல் ப்ரைமரி சாதனம் இன்ஆக்டிவ் ஆக இருந்தால் மற்ற சாதனங்களில் வாட்ஸ்அப் தானாகவே log out ஆகிவிடும். நான்கு சாதனங்கள் என்பது 4 செல்போன்களாக இருக்கலாம் அல்லது லேப்டாப், கணினியைக் கூட பயன்படுத்தலாம்.
வாட்ஸ்அப் அக்கவுண்ட் எவ்வாறு லிங்க் செய்வது?
ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட் மற்ற சாதனங்களில் லிங்க செய்ய, secondary போனில் வாட்ஸ்அப் மொபைல் எண்ணைப் பதிவிட வேண்டும். இப்போது ப்ரைமரி போனில் வந்த ஓ.டி.பி எண்ணை உள்ளிடவும். அடுத்து ப்ரைமரி போனில் உள்ள வாட்ஸ்அப் code-யை ஸ்கேன் செய்யவும். அவ்வளவு தான் இப்போது ப்ரைமரி வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை மற்ற சாதனங்களிலும் எளிதாக பயன்படுத்தலாம்.
இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களுக்கும் வழங்கப்படுகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கு வரும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வசதியைப் பயன்படுத்த ப்ரைமரி மற்றும் அனைத்து secondary சாதனங்களும் சமீபத்திய வாட்ஸ் அப் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.