ரூ. 2 கோடி வரையிலான பரிசுகளை வழங்கும் ஏர்டெல் டிவி!

இரவு 7.30 மணிக்கு (Log In) செய்து போட்டியில் பங்கேற்கலாம்.

ஏர்டெல் டிவி ஆப்பில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள் குறித்த போட்டியில் பங்குப்பெற்று ஜெயிப்போருக்கு ரூ. 2 கோடி வரையிலான பரிசுகளை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் தீவிரம் அடைந்துள்ள இந்நிலையில், ஏர்டெல் டி ஆப் யூசர்களுக்கு புதுமையான பரிசுப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து வெற்றி பெறுவோருக்கு ரூ. 2 கோடி வரையிலான பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் லைப் போட்டி எளிமையான கேள்விகள் அடங்கிய நேரலை விளையாட்டு ஆகும்.இதில், தற்சமயம் நடைபெறும் ஐபிஎல் கிரிகெட் தொடர்ந்து சார்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். தினமும் டி20 போட்டி துவங்குவதற்கு முன் இரவு 7.30 மணிக்கு துவங்கும். இந்த போட்டியின் லைவ் வெர்ஷன் போட்டி நடைபெறும் போதே நடத்தப்படும்.

வாடிக்கையாளர்கள் தங்களின் ஏர்டெல் டிவி ஆப்பை அப்டேட் செய்து போட்டியில் கலந்து கொள்ளலாம். யூசர்கள் தினமும் இரவு 7.30 மணிக்கு (Log In) செய்து போட்டியில் பங்கேற்கலாம்.இந்த போட்டியில் ஐபிஎல் டி20 தொடர் குறித்து 11 கேள்விகளை கேட்கப்படும். போட்டியில் கேட்கப்படும் 11 கேள்விகளுக்கும் சரியான பதில் வழங்கும் போட்டியாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். போட்டியாளர்கள் போட்டியினை சரியாக கணித்து உடனடியாக பரிசு தொகையை வென்றிட முடியும்.

×Close
×Close