/tamil-ie/media/media_files/uploads/2020/04/template-2020-04-15T150615.322.jpg)
You Tube Tamil Video Download, You Tube Video Download, How To Download You Tube Video, You Tube Video Offline, யூ டியூப், யூ டியூப் தமிழ் வீடியோ, யூ டியூப் தமிழ் வீடியோ டவுன்லோடு
You Tube Video Download Tamil News: YouTube என்பது உலகம் முழுவதும் மிக பிரபலமான வீடியோ streaming தளமாகும். அனைத்து தரப்பு வயதினருக்கும் பல்வேறு வகையான உள்ளடக்கத்தை கொண்டுள்ள இது கூகுளுக்கு சொந்தமானது. YouTube தனது பயனர்களுக்கு வீடியோக்களை பதிவிறக்கம் செய்து இந்த ஆப்பிற்குள்ளாகவே சேமித்து வைக்கும் வசதியையும் வழங்குகிறது. இதன் மூலம் பின்னர் இணையதள இணைப்பு இல்லாத போது அந்த வீடியோக்களை பயனர்கள் stream செய்து பார்க்கும் முடியும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இணையதள இணைப்பு மிகவும் மோசமாக, வீடியோக்களை நேரடியாக stream செய்து ஒழுங்காக பார்க்க முடியாத அளவுக்கு வேகம் குறைவாக இருக்கும் போது கூட நீங்கள் எளிதாக YouTube வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலாம். வீடியோக்களை பதிவிறக்குவதற்கு YouTube வெவ்வேறு தரம் மற்றும் அளவை வழங்கினாலும், நீங்கள் ஒரு பாடலை முழு HD தெளிவுத்திறனில் (resolution) பார்க்க முயற்சிக்கும் போது இந்த அம்சம் மிகவும் எளிது. இணைய டேட்டாவை திரும்ப திரும்ப பயன்படுத்தாமல் பதிவிறக்கம் செய்து அதை திரும்ப திரும்ப எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2020/04/template-2020-04-15T150635.687-1-300x200.jpg)
How To Download You Tube Video: எப்படி YouTube வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது.
YouTube ஐ திறந்துக் கொள்ளுங்கள்
நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோவை Play செய்து download பொத்தானை சொடுக்கவும்.
இன்னொரு வகையாக, YouTube feed ல் உள்ள வீடியோவுக்கு அடுத்து உள்ள மூன்று புள்ளிகள் icon ஐ சொடுக்கி Download என்பதை சொடுக்கவும்.
அடுத்து “Download quality என்பதை தேர்ந்தெடுக்கவும். உயர் தரத்தை தேர்ந்தெடுத்தால் அதிகப்படியான டேட்டாவை அது செலவழிக்கும்.
நீல நிற பதிவிறக்க டிக் (tick) ஐ நீங்கள் காணும் போது வீடியோ இப்போது offline viewing க்காக தயாராகிவிட்டது என்பது அர்த்தம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.