/tamil-ie/media/media_files/uploads/2023/08/New-Project19.jpg)
கூகுள் அக்கவுண்ட் மற்றும் கூகுளின் பிற வசதிகள் ஜிமெயில், குரோம், ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட வசதிகளை கிட்டதிட்ட அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன் எதுவாக இருந்தாலும் இந்த வசதியை பயன்படுத்தாதவர்கள் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் நாம் பொதுவாக கூகுள் அக்கவுண்ட்டை நாம் பயன்படுத்தும் போன் மற்றும் லேப்டாப்பில் சைன்-இன் (sign in) செய்து வைத்திருப்போம். சில நேரங்களில் தேவைக்காக மற்றவர்கள் லேப்டாப், போனில் ஜிமெயில் சைன்-இன் செய்திருப்போம். அவ்வாறு செய்யும் போது முறையாக சைன்-அவுட் (sign out) செய்திருப்போமா என்று தெரியாது.
அப்படி இருக்க உங்கள் கூகுள் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளது. அந்த வகையில், உங்கள் கூகுள் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? அல்லது வேறு டிவைசில் லாக் கின் செய்யப்பட்டுள்ளதா என்பதை இப்படி தெரிந்துகொள்ளுங்க.
- முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு போன் செட்டிங்ஸ் சென்று scroll down செய்து "Google" ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
2. அடுத்து "Manage your Google account" கிளிக் செய்யவும்.
3. அதில் இடபுறத்தில் உள்ள ஆப்ஷனை செலக்ட் செய்து "Security" செக்ஷனை கொடுக்கவும். அதில் இப்போது நிறைய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
4. இப்போது Scroll down செய்து "Your devices" கொடுக்கவும்.
5. மீண்டும் "Manage all devices"கொடுத்தால் உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் log inசெய்யப்பட்டுள்ள அனைத்து device-களின் விவரமும் காண்பிக்கப்படும்.
6. இதில் உங்களுக்கு தெரியாத unknown device இருந்தால் அதை sign out செய்யலாம்.
7. எதை டெலிட் செய்ய வேண்டுமோ அதன் மேல் tap செய்து sign out பட்டன் கொடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.