யூடியூப் வீடியோக்களை இலவசமாக மற்ற மொழிகளில் டப் செய்யும் வசதி விரைவில் அறிமுகப் படுத்த உள்ளது.
யூடியூப் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். உலக நாடுகளில் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். யூடியூப் சேனல்கள் மூலம் கிரியேட்டர்கள் பணம் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் அவர்களுக்கு இந்த அம்சம் பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது புதிய அம்சத்தில் யூடியூப் வீடியோக்களை இலவசமாக மற்ற மொழிகளில் டப் செய்து கொள்ளலாம். கூகுளின் இன்-ஹவுஸ் ஏரியா 120 இன்குபேட்டரின் தயாரிப்பான Aloud ஏ.ஐ பயன்படுத்துவதாக அறிவித்தது
கடந்த ஆண்டு, கூகுள், AI-இயங்கும் டப்பிங் தயாரிப்பான Aloud ஐ அறிமுகப்படுத்தியது, இது ஒரு வீடியோவை தானாக டிரான்ஸ்கிரிப்ட் செய்து அதன் டப்பிங் பதிப்பை உருவாக்க முடியும். டப்பை உருவாக்கும் முன் டிரான்ஸ்கிரிப்ஷனை மதிப்பாய்வு செய்து திருத்துவதற்கான விருப்பத்தையும் இது வழங்குகிறது. இப்போது வரை, வெவ்வேறு மொழிகளில் வீடியோக்களை உருவாக்க விரும்பினால், உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் அல்லது வழங்குநர்களை நம்பியிருக்க வேண்டும்.
ஆனால் இனி ஏ.ஐ Aloud மூலம் யூடியூப்பிலேயே மற்ற மொழிகளில் இலவமாக வீடியோ டப் செய்து பதிவிடலாம். Aloud தற்போது ஆங்கிலம், போர்த்துகீசியம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் கிடைக்கிறது. விரைவில் இந்தி உள்பட பல மொழிகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“