யூடியூப்பில் பயனர்கள் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் சமயத்தில், தங்களது மனநிலையை தெரிவிக்கும் வகையில் ஸ்மைலி அல்லது எமோஜி அனுப்பும் ரியாக்ஷன்ஸ் வசதியை யூடியூப் நிறுவனம் சோதித்து வருகிறது.
இதுதொடர்பான வலைப்பதிவில், பீட்டாவில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்த டைம்டு கமெண்ட்ஸ்(timed comments) வசதியை முழு நேர செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பரிசோதனை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டிருந்தது.
பயனர் ஒருவர் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கையில், அவர்கள் வீடியோ கமெண்ட் செக்ஷனை ஓப்பன் செய்து, ஸ்மைலி விருப்பங்களில் ரியாக்ட் செய்வது மட்டுமின்றி மற்றவர்கள் வீடியோவுக்கு அளித்த ரியாக்ஷன்ஸையும் காணலாம். குறிப்பாக வீடியோ ஓடிக்கொண்டிருக்கும்போது பிடித்த இடங்களில் பயனர்களால் ரியாக்ட் செய்ய முடியும். மற்றவர்கள் எந்த இடத்தில் ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை பயனாளர் பார்க்கும் வசதியும் சோதனை செய்யப்படுகிறது.
யூடியூப் புதிய ரியாக்ஷன் அம்சத்தில் பல வகையான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முடிவுகள் அடிப்படையில், எந்த ரியாக்ஷன்ஸ் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம் என்பதை முடிவு செய்திடும்.
ஏப்ரல் 2021இல், யூடியூப் பயனர்கள் தாங்கள் பார்க்கும் வீடியோவில் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கருத்துகளைச் சொல்லவும், பார்க்கும் வசதியையும் சோதிக்க தொடங்கியது. இது, வீடியோவில் சிறந்த தருணம் எங்கு அமைந்திருக்கிறது என்பதை கண்டறிய உதவும் என கூறப்பட்டது.
பீட்டா வசதி கொண்ட யூடியூப் பயனாளர்கள், Top Comment”, “Newest first” ஆப்ஷனுக்கு பதிலாக “Timed” ஆப்ஷனை தேர்வு செய்திட முடியும்.
இந்த புதிய அம்சம் சோதனை மூலம், யூடியூப் இன்ஸ்டாகிராமுடன் போட்டியிட அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. தொழில்நுட்ப ரீதியாக யூடியூப் ஷார்ட்ஸுக்குப் போட்டியாளராக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil