scorecardresearch

ஹை- குவாலிட்டி வீடியோ: யூடியூப்- ல் அட்டகாசமான 5 புதிய அம்சங்கள் அறிமுகம்

யூடியூப் பிரீமியம் பயனர்களுக்காக ஐந்து புதிய அம்சங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அது பற்றி இங்கு பார்ப்போம்.

YouTube
YouTube

யூடியூப் பிரீமியம் பயனர்களுக்காக ஐந்து புதிய அம்சங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அது பற்றி இங்கு பார்ப்போம்.

Video queue

YouTube-ன் டெஸ்க்டாப் வெர்ஷனில் வீடியோக்கள் வரிசைப்படுத்தும் திறன் உள்ளது. ஆனால் மொபைல் பயன்பாட்டில் இந்த அம்சம் இல்லை. சமீபத்திய புதுப்பித்தலின் மூலம், YouTube Premium பயனர்கள் இப்போது ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள் இரண்டிலும் வீடியோக்களை queue செய்து கொள்ளலாம்.

Watch together

யூடியூப்-பைநண்பர்கள், குடும்பத்தினருடன் பகிர்ந்து வீடியோ பார்க்க விரும்பினால், YouTube இன் சமீபத்திய Meet லைவ் ஷேரிங் அம்சம் பயனுள்ளதாக இருக்கும். ஆண்ட்ராய்டு போனில் கிடைக்கிறது. பிரீமியம் பயனர்கள் இப்போது கூகுள் மீட் அமர்வுகளை நடத்தலாம், அதில் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒன்றாக YouTube வீடியோக்களைப் பார்க்கலாம். விரைவில் ஷேர்ப்ளே வழியாக iOS இல் உள்ள FaceTime பயனர்களுக்கும் அதே அனுபவத்தை தருவதாக YouTube கூறியுள்ளது.

Pick where you left off

புதிய வீடியோக்களை தொடர்ந்து பார்க்கும் அம்சத்துடன் யூடியூப் ஒரு வசதியை மேம்படுத்தியுள்ளது. பிற ஸ்ட்ரீமிங் இயங்குதளங்களைப் போலவே, நீங்கள் நிறுத்திய இடத்திலிருந்து மீண்டும் பிளேபேக் செய்யலாம். YouTube Premium பயனர்கள் பல சாதனங்களுக்கு இடையில் மாறினாலும், அவர்கள் இடைநிறுத்தப்பட்ட அதே இடத்தில் இருந்து வீடியோக்களைப் பார்ப்பதை மீண்டும் தொடங்க முடியும்.

Smart Downloads

ஸ்மார்ட் டவுன்லோட்ஸ் என்பது ஒரு புதிய அம்சமாகும், இது பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்களை உங்கள் லைப்ரரியில் தானாகச் சேர்த்து, ஆஃப்லைனில் பார்ப்பதற்குப் பதிவிறக்கும். பிரீமியம் உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும், பயனர் Wi-Fi நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருக்கும் போது மட்டுமே இது செயல்படும், அதாவது YouTube மொபைல் டேட்டாவில் பயன்படுத்தினால் இந்த அம்சம் செயல்படாது.

1080p பிரீமியம்

யூடியூப் பிரீமியம் பயனர்கள் 1080p மேம்படுத்தப்பட்ட பிட்ரேட் பதிப்பில் வீடியோக்களைப் பார்க்க முடியும். விளையாட்டு அல்லது கேமிங் போன்ற பல விவரங்கள் மற்றும் இயக்கத்துடன் வீடியோக்களைப் பார்ப்பவராக நீங்கள் இருந்தால், புதிய அம்சம் ஆழமான காட்சி தரத்தை வழங்கும் என்று யூடியூப் நிறுவனம் கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Youtube introduces 5 new features for premium users

Best of Express