யூடியூபில் முடிக்கப்படாத வீடியோக்களை இனி ‘தொடர்ந்து பார்க்க’ அனுமதி!

Youtube introduces continue watching feature for Android iOS Tamil News உங்கள் உங்கள் கணினி, டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போனில் ஒரே கூகுள் கணக்கில் உள்நுழைந்துள்ளீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

Youtube introduces continue watching feature for Android iOS Tamil News
Youtube introduces continue watching feature for Android iOS Tamil News

Youtube introduces continue watching feature for Android iOS Tamil News : 9TO5Google-ன் அறிக்கையின்படி, யூடியூப் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த அம்சம் மெதுவாக அனைத்து பயனர்களுக்கும் செய்லபடும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

பல சாதனங்களில், யூடியூபில் வீடியோ பார்க்கும் தொடர்ச்சியை மேலும் மேம்படுத்த ஆண்ட்ராய்டு மற்றும் iOS மொபைல் சாதனங்களுக்கான “தொடர்ந்து பார்க்கும்” அம்சத்தை நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

இதேபோன்ற அம்சம் ஏற்கனவே யூடியூப்பின் வலை பதிப்பில் கிடைக்கிறது. இது பயனர்கள் கடைசியாக நிறுத்திய இடத்திலிருந்து தொடர்ந்து வீடியோவைப் பார்க்க உதவுகிறது.

இப்போது யூடியூப், அதன் திறன்களை விரிவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது பயனர்கள் அவர்கள் நிறுத்திய இடத்திலிருந்து பல சாதனங்களிலும் வீடியோவை தொடர்ந்து பார்க்க அனுமதிக்கும்.

அதாவது, நீங்கள் உங்கள் லேப்டாப்பில் ஒரு யூடியூப் வீடியோவைப் பார்க்கும்போது, அதே வீடியோவைப் பார்க்க ஸ்மார்ட்போனுக்கு மாற விரும்பினால், அதனை எளிதாக இனி பார்க்கலாம்.

யூடியூப் பயன்பாட்டில், கீழே உள்ள மினி பிளேயர், நீங்கள் முடிக்காத கடைசி யூடியூப் வீடியோவைத் திறக்க அனுமதிக்கிறது.

உங்கள் ஸ்மார்ட்போனின் யூடியூப் செயலி, நீங்கள் பார்த்த வீடியோக்களை சாதனங்களுக்கிடையே ஒத்திசைக்க, உங்கள் கணினி, டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போனில் ஒரே கூகுள் கணக்கில் உள்நுழைந்துள்ளீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

யூடியூப், உலகின் மிகவும் பிரபலமான சமூக ஊடக பயன்பாடுகளில் ஒன்று. இது தலைப்புகள் மற்றும் ஏராளமான வகைகளில் உள்ளடக்கத்தின் மிகுதியாக உள்ளது.

யூடியூப், “தொடர்ந்து பார்க்கும்” அம்சத்தை அறிமுகப்படுத்தியவுடன், பயனர்கள் பல்வேறு சாதனங்களில் வீடியோக்களைப் பார்க்கும் போது நெறிப்படுத்தப்பட்ட பார்வை அனுபவத்தைப் பெற அனுமதிக்கும்.

அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் எப்போது கிடைக்கும் என்று நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், மொபைலில் யூடியூபுக்கான அம்சம் இனி பீட்டா கட்டத்தில் இல்லாததால், நாம் தொடர்ந்து சரிபார்க்கவேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Youtube introduces continue watching feature for android ios tamil news

Next Story
ஒப்போ A55 இந்தியாவில் அறிமுகம் : விலை, விவரக்குறிப்புகள் மற்றும் பலOppo A55 launched in India price specifications Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com