வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களை கவரும் வண்ணம் புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக சமீப நாட்களாக 15 நாட்களுக்கு ஒரு அப்டேட்டை வெளியிட்டு வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது, வீடியோ அம்சத்தில் புதிய அப்டேட்டை சோதனை செய்து வருகிறது. அதாவது யூடியூப் போன்று வீடியோ அம்சத்தைப் பயன்படுத்த வசதியாக ஃபார்வர்ட் மற்றும் ரிவைண்ட் வீடியோ பிளேபேக் பட்டன்களை அறிமுகம் செய்ய உள்ளது.
ப்ரோகிரஸ் பார் (Progress bar) பயன்படுத்தாமல் வீடியோக்களை தேவைக்கு ஏற்ப அட்ஜர் செய்து பயன்படுத்த இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. WABetaInfo-படி, புதிய வீடியோ பிளேபேக் பட்டன் பயனர்கள் வீடியோக்களை 10 நொடிகள் ரிவைண்ட் செய்து ஃபார்வர்டு செய்து பயன்படுத்த அனுமதிக்கிறது. இந்த புதிய பட்டன் யூடியூப் செயல்படுத்துவதைப் போலவே இருக்கின்றன.
இந்த புதிய வசதி தற்போது பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் பீட்டா ஆண்ட்ராய்டு 2.23.24.6 வெர்ஷனில் கிடைக்கிறது. இந்த வசதி விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“