கண்டெண்ட் கிரியேட்டர்கள் கவனத்திற்கு... உங்கள் வீடியோவுக்கு ஒரு பூஸ்டர்; யூடியூப் 'ஹைப்' அம்சம் அறிமுகம்!

யூடியூப் தனது புதிய 'ஹைப்' (Hype) என்ற அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது யூடியூபில் வீடியோக்களை உருவாக்கும் சிறிய படைப்பாளர்களுக்கு (Creators) மிகவும் பயனுள்ள புதிய வசதி.

யூடியூப் தனது புதிய 'ஹைப்' (Hype) என்ற அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது யூடியூபில் வீடியோக்களை உருவாக்கும் சிறிய படைப்பாளர்களுக்கு (Creators) மிகவும் பயனுள்ள புதிய வசதி.

author-image
WebDesk
New Update
youtube hype

கண்டெண்ட் கிரியேட்டர்கள் கவனத்திற்கு... யூடியூப் 'ஹைப்' அம்சம் இந்தியாவில் அறிமுகம்!

தமிழகத்தின் எந்த மூலையிலிருந்தும் தரமான வீடியோக்களை உருவாக்கும் யூடியூப் படைப்பாளரா நீங்கள்? உங்கள் திறமை உலகறியச் செய்ய புதிய வாய்ப்பு இப்போது உங்கள் கையில். யூடியூப் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள 'ஹைப்' (Hype) அம்சம், குறைந்த சந்தாதாரர்களைக் கொண்ட உங்களுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளது. இனி உங்கள் வீடியோக்கள் பார்வையாளர்களுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை, நீங்களே அவற்றை முன்னிலைப்படுத்தலாம். 

Advertisment

வழக்கமாக, யூடியூப் போன்ற பெரிய தளங்களில் புதிய கிரியேட்டர்கள் தங்கள் படைப்புகளைப் பரவலாகக் கொண்டு சேர்ப்பது சவாலாகவே இருந்து வந்தது. லட்சக்கணக்கான வீடியோக்களுக்கிடையே உங்கள் தனித்துவமான குரல் கவனிக்கப்படாமல் போகலாம். ஆனால், 'ஹைப்' அம்சம் இந்த தடைகளை உடைத்தெறியும் கருவியாக உருவெடுத்துள்ளது.

'ஹைப்' என்றால் என்ன, அது எப்படி உதவுகிறது?

எளிமையாகச் சொன்னால், 'ஹைப்' என்பது உங்கள் வீடியோவுக்குக் கிடைக்கும் "டிஜிட்டல் புஷ்". ஒரு பார்வையாளர் உங்கள் வீடியோவின் 'லைக்' பட்டனுக்கு கீழே உள்ள 'ஹைப்' அழுத்துவதன் மூலம், அந்த வீடியோவை அவர் பரிந்துரைக்கிறார் அல்லது ஊக்குவிக்கிறார் என்று அர்த்தம். இவ்வாறு கிடைக்கும் ஒவ்வொரு 'ஹைப்'புக்கும் உங்கள் வீடியோவுக்குப் புள்ளிகள் சேரும்.

Advertisment
Advertisements

இந்த புள்ளிகளின் அடிப்படையில், யூடியூப் 'டாப் 100 ஹைப் செய்யப்பட்ட வீடியோக்கள்' என்ற தரவரிசைப் பட்டியலை உருவாக்கும். உங்கள் வீடியோவுக்கு எவ்வளவு அதிகமான 'ஹைப்'கள் கிடைக்கிறதோ, அவ்வளவு வேகமாக இந்தப் பட்டியலில் மேலேறி, அதிகப்படியான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். குறிப்பாக, 5 லட்சத்திற்கும் குறைவான சப்ஸ்கிரைபர்கள் கொண்ட கிரியேட்டர்களுக்கு இந்த அம்சம் பொன்னான வாய்ப்பு.

சிறிய படைப்பாளரின் வீடியோவை நீங்கள் 'ஹைப்' செய்யும்போது, அவருக்குக் கூடுதல் போனஸ் புள்ளிகள் கிடைக்கும். இதனால், குறைந்த சந்தாதாரர்களைக் கொண்டவர்களுக்கும் தங்கள் வீடியோக்களை பிரபலப்படுத்த நியாயமான வாய்ப்பு கிடைக்கும்.

யூடியூப் நிறுவனம், "புதிய பார்வையாளர்களைச் சென்றடைவது சில சமயங்களில் கடினமாக இருக்கும்" என்று கூறுகிறது. இந்த 'ஹைப்' அம்சம், சிறிய மற்றும் வளர்ந்து வரும் படைப்பாளர்களுக்கு தங்கள் கண்டெட்டை அதிகமானோரிடம் கொண்டு செல்லவும், யூடியூப் உலகில் தங்கள் இடத்தை உருவாக்கவும் உதவும் பாலமாகச் செயல்படும் என்பதில் சந்தேகமில்லை.

'ஹைப்' அம்சம் மட்டுமின்றி, யூடியூப் சமீபத்தில் வேறு சில புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தானியங்கி டப்பிங் படைப்பாளர்கள் தங்கள் வீடியோக்களின் ஆடியோவை வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்துச் சேர்க்கலாம். நேரடி ஒளிபரப்புகளின்போது ரசிகர்கள் படைப்பாளர்களுக்கு டிஜிட்டல் பரிசுகளை வழங்கலாம். யூடியூப் ஸ்டுடியோவில் உள்ள 'இன்ஸ்பிரேஷன் டேப்' மூலம், படைப்பாளர்கள் வீடியோ யோசனைகள், தலைப்புகள், சிறுபடங்கள் (thumbnails) மற்றும் உள்ளடக்கக் கட்டமைப்பு குறித்து AI உதவியைப் பெறலாம். மொத்தத்தில், யூடியூப் 'ஹைப்' அம்சம், கண்டெண்ட் படைப்பாளர்களுக்கு, குறிப்பாக சிறிய சேனல்களை நடத்துபவர்களுக்கு, வீடியோக்களைப் பிரபலப்படுத்தவும், அதிகப் பார்வையாளர்களை ஈர்க்கவும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

Youtube

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: