யூடியூப் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் தளமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் யூடியூப் பயன்படுத்துகின்றனர். யூடியூப் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். செய்தி, பொழுதுபோக்கு, கல்வி, விளையாட்டு என ஏராளமான தகவல்கள் அதில் உள்ளன. இந்நிலையில் யூடியூப் பெயரில் இணைய மோசடி , ஃபிஷிங் தாக்குதல் நடைபெறுவதாக நிறுவனம் எச்சரித்துள்ளது.
Advertisment
சமீபத்தில், கூகுள் சப்போர்ட் ஒரு பதிவு வெளியிட்டது, அதில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு யூடியூபர்களை குறிவைத்து போலியாக ஆள்மாறாட்டம் செய்து பயனர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்புவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி இ-மெயில் எப்படி இருக்கும்?
நீங்கள் யூடியூப் உடன் பதிவு செய்யப்பட்ட இ-மெயில் முகவரிக்கு ‘YouTube policy change’ என்ற பெயரில் 'no-reply@youtube.com' என்று இ-மெயில் அனுப்பபடுகிறது.
புதிய பணமாக்குதல் கொள்கை மற்றும் விதிகளைப் பயனர்களுக்குத் தெரிவிக்க யூடியூப் மூலம் இ-மெயில் அனுப்பபட்டுள்ளது. பயனர்கள் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் ஆவணத்தைப் பதிவிறக்கலாம். கடிதத்தை மதிப்பாய்வு செய்து பதிலளிக்க பயனருக்கு 7 நாட்கள் அவகாசம் உள்ளது, அதை செய்யாவிட்டால் அதன் பிறகு உங்கள் கணக்கு தடைசெய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விதிகள் மற்றும் கொள்கைகளில் மாற்றம் குறித்து இ-மெயில் அனுப்பபடுகிறது.
ஃபிஷிங் முயற்சிகளுக்கு எதிராக நாம் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?
மின்னஞ்சலில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்யாமல் இருப்பதை உறுதிசெய்யவும். நீங்கள் தவறுதலாக கிளிக் செய்யும் பட்சத்தில் அதில் வரும் எந்த ஆவணங்களையும் பதிவிறக்கம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யவும்.
இந்நிலையில் யூடியூப் நிறுவனம் இதுகுறித்து ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“