Youtube watch and search history : நீங்கள் கூகுளில் என்ன தேடுகிறீர்கள், யூடியூபில் என்ன பார்க்கிறீர்கள் முதற்கொண்டு அனைத்தையும் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கும் கூகுள். நீங்கள் தேடும் கண்டெண்ட் உங்களின் ரகசியமாக இருக்கும் பட்சத்தில் அதைப்பற்றி யாராவது தெரிந்து கொண்டால் உங்களின் மனநிலை என்னவாக இருக்கும்?
தற்போதைய மிக முக்கியமான தேடு பொருளே ஆண்ட்ராய்ட் போனில் உங்களின் சர்ச் மற்றும் வாட்ச் ஹிஸ்ட்ரியை எப்படி டெலிட் செய்வது என்பது தான்.
யூடியூப் வாட்ச் ஹிஸ்ட்ரி டெலிட் செய்வது எப்படி ?
யூடியூப் அஃபிசியல் சைட்டிற்கு செல்லவும்
உங்களின் அக்கௌண்ட்டில் சைன் - இன் செய்யவும்
அதில் இடது கைப்புறம் கார்னரில் இருக்கும் ஹிஸ்ட்ரியை க்ளிக் செய்யவும்
வலது கைப்பக்கம் அமைந்திருக்கும் வாட்ச் ஹிஸ்ட்ரியை தேர்வு செய்து கொள்ளவும்
அதில் உங்களுக்கு வேண்டாத வீடியோ ஹிஸ்ட்ரியை நீங்கள் ரிமூவ் செய்யலாம் அல்லது க்ளியர் ஆல் கொடுத்து அனைத்து ஹிஸ்ட்ரியையும் டெலிட் செய்துவிடலாம்.
சர்ச் ஹிஸ்ட்ரியை டெலிட் செய்ய வேண்டும் என்றால், அதன் வாட்ச் ஹிஸ்ட்ரிக்கு கீழே இருக்கும் அந்த ஆப்சனை க்ளிக் செய்து சர்ச் ஹிஸ்ட்ரியையும் முழுமையாக நீங்கள் Clear All Search History - என்ற ஆப்சன் மூலம் டெலிட் செய்யலாம்.
மேலும் படிக்க : சன் டிரைக்ட் வாடிக்கையாளர்களா நீங்கள் ?