இனி யூடியூப் வீடியோக்களில் டிஸ்லைக் எண்ணிக்கை தெரியாது!

Youtube will stop showing dislike counts on all videos Tamil News இதுபோன்ற நிகழ்வு சிறிய சேனல்களில் அதிக விகிதத்தில் நிகழ்ந்ததாக யூடியூப் மேலும் கூறுகிறது.

Youtube will stop showing dislike counts on all videos Tamil News
Youtube will stop showing dislike counts on all videos Tamil News

Youtube will stop showing dislike counts on all videos Tamil News : யூடியூப் தனது தளம் முழுவதும் உள்ள அனைத்து வீடியோக்களிலும் டிஸ்லைக் எண்ணிக்கையைக் காட்டுவதை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிஸ்லைக் தாக்குதல்கள் அல்லது துன்புறுத்தல்களால் குறிவைக்கப்படும் சிறிய அல்லது வளர்ந்து வரும் படைப்பாளிகளுக்கு இந்த சமீபத்திய மேம்பாடு உதவும் என்று நிறுவனம் வலியுறுத்துகிறது. இந்த மாற்றத்தின் மூலம், “பார்வையாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் இடையே மரியாதைக்குரிய தொடர்புகளை” யூடியூப் மேம்படுத்த விரும்புகிறது.

இருப்பினும் இந்த பிளாட்ஃபார்ம் டிஸ்லைக் பட்டனை அகற்றவில்லை ஆனாலும், பயனர்கள் எந்த வீடியோவையும் விரும்பாதிருக்கலாம். யூடியூப் படி, டிஸ்லைக் எண்ணிக்கை தனிப்பட்ட கருத்துகளாகப் படைப்பாளர்களுக்குத் தெரியும். இது சில  பொதுவெளியில் ஏற்படும் அவமானங்களைத் தடுக்க உதவும். இந்த அறிவிப்பு ஒரு வலைப்பதிவு போஸ்டில் வெளியிடப்பட்டது.

“பார்வையாளர்கள் இன்னும் டிஸ்லைக் பட்டனைப் பார்க்கலாம் மற்றும் பயன்படுத்தலாம். ஆனால், எண்ணிக்கை அவர்களுக்குத் தெரியாததால், எண்ணிக்கையை அதிகரிக்க அவர்கள் வீடியோவின் டிஸ்லைக் பட்டனைக் குறிவைப்பது குறைவு என்று நாங்கள் கண்டறிந்தோம்” என்று நிறுவனம் கூறியது.

இது தவிர, சிறிய படைப்பாளிகள் தாங்கள் புதிய சேனலைத் தொடங்கிய சமயத்தில் இதுபோன்ற செயலால் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுவதாகவும் நம்புகிறார்கள். இது பிளாட்ஃபார்ம் செய்த பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு சிறிய சேனல்களில் அதிக விகிதத்தில் நிகழ்ந்ததாக யூடியூப் மேலும் கூறுகிறது.

எனவே, நிறுவனம் விரும்பாத எண்ணிக்கையை யூடியூப் முழுவதும் தனிப்பட்டதாக்குகிறது. ஆனால், டிஸ்லைக் பட்டன் நீங்கவில்லை. கிரியேட்டர்கள் தங்களின் உள்ளடக்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள, யூடியூப் ஸ்டுடியோவில், ஏற்கனவே உள்ள மற்ற அளவீடுகளுடன் தங்களின் சரியான டிஸ்லைக் எண்ணிக்கையைக் கண்டறிய முடியும். அறிவிப்பின்படி, இந்த மாற்றம் படிப்படியாகத் தொடங்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Youtube will stop showing dislike counts on all videos tamil news

Next Story
ஜிஎஸ்டி எதிரொலி: ஐ-போன் 7, 6எஸ் விலை குறைப்பு; வாங்கலாமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com