ஜோஹோவின் அடுத்த பாய்ச்சல்; வணிக நிறுவனங்களுக்கு இலவச ஏ.ஐ ஏஜெண்டிக் வசதிகள் அறிமுகம்

வாடிக்கையாளர் அனுபவம் முதல் மனிதவளத் துறை வரை; செயற்கை நுண்ணறிவு ஏஜெண்ட் வசதியை இலவசமாக அறிமுகப்படுத்திய ஜோஹோ நிறுவனம்

வாடிக்கையாளர் அனுபவம் முதல் மனிதவளத் துறை வரை; செயற்கை நுண்ணறிவு ஏஜெண்ட் வசதியை இலவசமாக அறிமுகப்படுத்திய ஜோஹோ நிறுவனம்

author-image
WebDesk
New Update
zoho jobs

தொழில் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் மேம்பாடு மற்றும் செயல்திறனை அதிகரிக்க, மூன்று பிரிவுகளில் தினசரி பணிகளுக்கான புதிய ஏ.ஐ (AI) ஏஜெண்டிக் அம்சங்களை ஜோஹோ (Zoho) நிறுவனம் அறிவித்துள்ளது. 

Advertisment

தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ, பயனர்களின் வசதிக்காக ஜோஹோ ஒத்துழைப்பு, வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் மனிதவள துறைகளில் செயற்கை நுண்ணறிவு முகவர் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த சேவைகள் இலவசமாகக் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன. 

மின்னஞ்சல் மற்றும் ஒத்துழைப்பு தொகுப்பான ஜோஹோ வொர்க்ப்ளேஸ் (Zoho Workplace), எளிய ப்ராம்ப்ட்கள் மூலம் பயனர்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல்களைத் தேடவும், அவற்றைச் சரி செய்யவும், புதிய மின்னஞ்சலை உருவாக்கி, அனுப்பவும் உதவுகிறது. இந்த தொகுப்பில் Zoho Mail, Zoho Sheet, Zoho Tables மற்றும் குழு அரட்டைகளுக்கான Zoho Cliq ஆகியவை அடங்கும். அதே நேரத்தில் உரையாடல் ஏ.ஐ ஆன Ask Zia வழிகாட்டல்களை எடுத்து அவற்றை செயல்படுத்துகிறது. மேலும், படிக்காத மின்னஞ்சல்களை ஆராய்ந்து, விற்பனை சார்ந்து உள்ளவற்றை அடையாளம் கண்டு, அவற்றை ஒரு லீடாக மாற்றக்கூடிய லீட் ஜெனரேஷன் ஏஜென்ட்டும் உள்ளது. 

மேலும் பயனர்கள் ஜோஹோ டேபிள்களைப் பயன்படுத்தி அட்டவணைகள், மாதிரி தரவு மற்றும் இணைக்கப்பட்ட புலங்களுடன் எளிதாக ஒரு தளத்தை அமைக்கலாம். சென்டிமென்ட் பகுப்பாய்வு மற்றும் மொழி கண்டறிதல் புலங்கள் தரவை மிகவும் புத்திசாலித்தனமாகவும் சூழலுக்கு ஏற்றதாகவும் மாற்ற உதவுகின்றன. 

Advertisment
Advertisements

அடுத்ததாக வாடிக்கையாளர் அனுபவத் துறைக்காக, ஜோஹோ டெஸ்க் குறிப்பிட்ட பணிகளுக்கு ஏ.ஐ முகவர்களை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் தீர்வுகளை மேம்படுத்துவதற்கான டிக்கெட் தீர்மானங்களை தீர்மான நிபுணத்துவ முகவர் (Resolution Expert Agent) ஆவணப்படுத்துகிறது மற்றும் இதே போன்ற கவலைகளை விரைவாக நிவர்த்தி செய்ய உதவும் வகையில் சுருக்கப்பட்ட டிக்கெட்டுகளை தீர்மான பரிந்துரைகளாக (Resolution References) சேமிக்கிறது.

அடுத்ததாக மனிதவளத் துறைக்காக, திறமையாளர்களை கண்டறிவதற்கு உதவும் தளமான Zoho Recruit, வேலை தேடும் ஆர்வலர்களை அடையாளம் காணுதல் (Candidate Matches) மற்றும் வேலைகளை அடையாளம் காணுதல் (Job Matches) போன்ற சேவைகளைக் கொண்டுள்ளது. இவற்றின் மூலம் விண்ணப்பங்கள், வேலை குறித்த விளக்க குறிப்புகள் மற்றும் ஆர்வலர் சுயவிவரங்களைப் பார்த்து தேர்வு செய்யலாம். 

கூடுதலாக, ஏ.ஐ-உதவி மதிப்பீட்டு உருவாக்கம் மூலம் குறிப்பிட்ட வேலைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப கேள்விகள், பதில்கள் மற்றும் மதிப்பெண் அளவுகள் உள்ளிட்ட மதிப்பீடுகளை உருவாக்க முடியும்.

ஜோஹோ நிறுவனம் இந்த செயற்கை நுண்ணறிவு வசதிகளை இலவசமாக அறிமுகப்படுத்துவதன் மூலம், வணிக நிறுவனங்களின் பல்வேறு வேலைகளை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.

Artificial Intelligence zoho

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: