/indian-express-tamil/media/media_files/2025/10/13/zoho-mail-vs-gmail-2025-10-13-19-03-42.jpg)
ஜோஹோ மெயில் Vs ஜிமெயில்: பாதுகாப்பு, ஏ.ஐ. திறன், கட்டணம் -எந்த மின்னஞ்சல் சேவை உங்களுக்கு ஏற்றது?
தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்ட ஜோஹோவின் மின்னஞ்சல் சேவைதான் ஜோஹோ மெயில். சமீபத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பலர் இந்த சேவைக்கு மாறியதையடுத்து, பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மிக முக்கியமாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை ஜோஹோ மின்னஞ்சலுக்கு மாற்றுவதாக கடந்த வாரம் அறிவித்தார்.
தனது 'X' தளத்தில் வெளியிட்ட பதிவில், "அனைவருக்கும் வணக்கம், நான் ஜோஹோ மெயிலுக்கு மாறிவிட்டேன். எனது மின்னஞ்சல் முகவரியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கவனியுங்கள். எனது புதிய மின்னஞ்சல் முகவரி amitshah.bjp@zohomail.in. எதிர்காலக் கடிதப் பரிமாற்றங்களுக்கு, இந்தக் குறிப்பிட்ட முகவரியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கவனத்திற்கு நன்றி," என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
தொழில்நுட்ப நிறுவனங்களான ஜோஹோ போன்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு தயாரிப்பு மற்றும் சேவைகளை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முயற்சியாக இந்த நடவடிக்கை வந்துள்ளது. ஜோஹோ சமீபத்தில் அதன் எஸ்.எம்.எஸ். செயலியான அரட்டை மூலமாகவும் அதிக கவனத்தைப் பெற்றது. அண்மையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்த தனது விளக்கக் காட்சி, ஜோஹோ வொர்க்ஸ்பேஸ் கருவிகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டதாகக் கூறினார். ஜோஹோ மெயில் குறித்த இந்தச் சலசலப்புடன், இது மெயில், மைக்ரோசாஃப்ட் அவுட்லுக் போன்ற பிரபலமான மாற்றுகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை பார்க்கலாம்.
ஜோஹோ மெயில் பலதரப்பட்ட அம்சங்களை வழங்குகிறது. அவற்றில் சில மின்னஞ்சல் சேவை வழங்குநர்களுக்குப் பொதுவானவை; மற்றவை ஜிமெயில் மற்றும் அவுட்லுக் சேவைகளில் இருந்து இதை வேறுபடுத்துகின்றன.
தனித்துவமான அம்சங்கள்
அதிகபட்ச பைல் சைஸ்: ஜோஹோ மெயிலில் ஒரு இணைப்பிற்கு அதிகபட்சமாக 1GB பைல் இணைக்க முடியும். ஆனால், கூகுள் வொர்க் ஸ்பேஸ்-ன் இயல்புநிலை சைஸ் ஒரு கோப்புக்கு 25 MB மட்டுமே. அன்லிமிடெட் மீறும் பைல்ஸ் தானாகவே ஒரு இணைப்பாக மாற்றப்பட்டு, மின்னஞ்சலில் சேர்க்கப்படுகின்றன.
ஜோஹோ மெயில் பயனர்கள், அனுப்பியதற்கான கால அவகாசம் (Send Window) முடிந்த பிறகும், ஒரு மின்னஞ்சலைத் திரும்பப் பெற முடியும். இது ஜிமெயிலுக்கு மாறுபாடானது. ஜிமெயிலில் பயனர்களுக்கு 'Undo Send' செய்யச் சில விநாடிகள் மட்டுமே சிறிய சாளரம் கிடைக்கும். இருப்பினும், ஜோஹோ மெயில் மூலம் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் திரும்பப் பெறப்பட்டதாகப் பெறுநருக்கு நோட்டிபிகேசன் செல்லும். Calendar, Tasks, Notes, Contacts, மற்றும் Bookmarks போன்ற பல்வேறு உற்பத்தித் திறன் கருவிகள் மின்னஞ்சலுடன் ஒரு பகுதியாக வழங்கப்படுகின்றன.
மேலும், ஜோஹோ Streams-க்கான அணுகலையும் இது வழங்குகிறது. இது Slack-ஐப் போன்ற ஒரு தளமாகும். இது ஊழியர்கள் இடுகைகளை உருவாக்க, சக ஊழியர்களைக் குறியிட (Tag) மற்றும் பணிகளை ஒதுக்க அனுமதிப்பதன் மூலம் பணியிடக் கூட்டுழைப்பை மேம்படுத்துகிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) திறன்கள்
ஸ்மார்ட் பில்டர்ஸ் (Smart Filters): ஜோஹோ மெயில் உள்வரும் செய்திகளை ஸ்கேன் செய்து, அவற்றை அறிவிப்புகள் (Notifications), செய்திமடல்கள் (Newsletters) போன்ற கோப்புறைகளாக வகைப்படுத்த, ஸ்மார்ட் ஏ.ஐ-ஆல் இயக்கப்படும் வடிகட்டிகளைப் பயன்படுத்துகிறது. பயனர்கள் தங்கள் இன்பாக்ஸிற்கு மேலும் முன்னுரிமை அளிக்க உதவும் வகையில், ஓபன் ஏ.ஐ. மூலம் இயங்கும் அசிஸ்டெண்ட் ஸியா-வை இயங்குதளத்துடன் ஒருங்கிணைத்துள்ளது. ஒரு சொற்றொடரை மட்டும் உள்ளிடுவதன் மூலம் மின்னஞ்சல்களை விரைவாக உருவாக்க Zia-வைப் பயன்படுத்தலாம். ஏ.ஐ. அசிஸ்டெண்ட் மின்னஞ்சலின் தலைப்பு (Subject) மற்றும் கண்டெண்ட் (Content) பரிந்துரைக்கும். ஏ.ஐ-ஆல் உருவாக்கப்பட்ட மின்னஞ்சலின் டோன் (Tone) பெறுநருக்கு ஏற்ப மாற்றியமைக்க முடியும்.
ஜிமெயிலின் ஏ.ஐ. மேம்பாடுகள்:
ஜிமெயில் அக்கவுண்ட்களில் கடந்த ஆண்டிலிருந்தே ஏ.ஐ-ஆல் இயக்கப்படும் மின்னஞ்சல் காணப்படுகின்றன. இந்த ஆண்டு கூகுள் மேலும் மேம்பட்ட அம்சங்களை அறிவித்தது. பயனரின் இன்பாக்ஸ் மற்றும் கூகுள் டிரைவில் இருந்து தகவல்களைப் பிரித்தெடுத்து, சாத்தியமான பதில்களின் டோன் மற்றும் பாணியுடன் சிறப்பாகப் பொருந்துமாறு 'சூழல்சார்' மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பதில்கள் அம்சத்தையும் ஜிமெயில் வழங்குகிறது.
பாதுகாப்பு மற்றும் தனியுரிமை
ஜோஹோ மெயில், அதன் பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேம்பட்ட அம்சங்களை வழங்குகிறது. தீங்கு விளைவிக்கும் இணைப்புகள் (harmful attachments), அக்கவுண்ட் அபகரிப்புகள் (account takeovers), பிராண்ட் மோசடி (brand forgery), விஐபி ஆள்மாறாட்ட மோசடி (VIP impersonation fraud), ஃபிஷிங் முயற்சிகள் (phishing attempts) போன்றவற்றுக்கு எதிராக மேம்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. மின்னஞ்சல் என்க்ரிப்ட் (Encryption): அனைத்து மின்னஞ்சல்களும் அவை அனுப்பப்படும்போதும் (in transit), ஜோஹோவின் சர்வர்களில் சேமிக்கப்படும்போதும் என்க்ரிப்ட் (Encrypted) செய்யப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலையான டி.எல்.எஸ். குறியாக்கத்துடன் கூடுதலாக, ஜோஹோ மெயில் S/MIME தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. இது பயனர்கள் டிஜிட்டல் கையொப்பங்களை உருவாக்க அனுமதிப்பதன் மூலம், மின்னஞ்சல்களை மேலும் பாதுகாத்து, தாக்குதல்களிலிருந்து காக்கிறது. "மின்னஞ்சல் பரிமாற்றத்தில் உள்ள மற்ற வழங்குநர் டி.எல்.எஸ். குறியாக்கத்தை ஆதரிக்கவில்லை என்றால், அந்த மின்னஞ்சல் 'Plain' என்று குறிக்கப்பட்டு, உங்களுக்குத் தெரிவிக்கப்படும்" என்று நிறுவனம் கூறியுள்ளது.
ஒரு டொமைனுக்கு (Domain) 5 பயனர்கள் வரை மின்னஞ்சல் ஹோஸ்டிங்கை ஜோஹோ வழங்குகிறது. இதில் ஒவ்வொரு பயனருக்கும் 5 GB சேமிப்பகம் கிடைக்கிறது. நிறுவனங்களுக்கான பிரத்யேக (Custom) மின்னஞ்சல்களை அனுப்பும் சந்தாப் தொகுப்புகள், பயனருக்கு மாதத்திற்கு ரூ.59 (ஆண்டுதோறும் பில் செய்யப்படும்போது) என்ற விலையில் தொடங்குகிறது. இதில் Zia AI உதவியாளர், Identity Management & MFA App, eWidget & Developer Space போன்ற வசதிகளுக்கான அணுகல் கிடைக்கும். Gmail-இன் கட்டணப் பதிப்பிற்கான (Gemini AI உதவியாளர், Google Vids மற்றும் பலவற்றுக்கான அணுகலுடன்) தொடக்கத் திட்டம் ஒரு பயனருக்கு மாதத்திற்கு ரூ.160-ல் தொடங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.