Advertisment

குடும்பத்தினர் உரையாடி மகிழ புதிய வலைதளம்: ZOHO நிறுவன அதிபர் ஸ்ரீதர் வேம்பு அறிவிப்பு

Zillum குறித்து சோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் Zillum என்பதற்கான பெயர் காரணத்தை விளக்கியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குடும்பத்தினர் உரையாடி மகிழ புதிய வலைதளம்: ZOHO நிறுவன அதிபர் ஸ்ரீதர் வேம்பு அறிவிப்பு

ZOHO Sridhar Vembu creates new social domain for family called Zillum: குடும்பங்கள் தங்களுக்கான தகவல் தொடர்பு மற்றும் தரவுகளுக்காக ஸ்ரீதர் வேம்புவின் ZOHO நிறுவனம் Zillum என்ற சமூக வலைத்தளத்தை உருவாக்கி வருகிறது.  

Advertisment

நம்மில் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களிலே அதிக நேரத்தை செலவிட்டு வருகிறோம். அதுவும் 4ஜி வேக இணைய இணைப்பு வந்தபின் சமூக வலைதளங்களிலே மூழ்கி கிடக்கிறோம். சிலர் சமூக வலைதளங்களில் மூழ்கி குடும்பத்தினரையே மறந்து விடுகின்றனர். அவர்களுக்கு நேரம் ஒதுக்க மறுக்கின்றனர்.  அதேநேரம் வெளிவட்ட நண்பர்களுடன் நாள் முழுவதும் உரையாடி வருகின்றனர். அதாவது நண்பர்கள், ஏன் குடும்ப உறுப்பினர்களுடனான தகவல் தொடர்பு கூட சமூக வலைதளங்கள் மூலம் நிகழ்கின்றன. நம்மில் பலர் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் குரூப் தொடங்கி வைத்துக் கொண்டு, அதிலே தான் குடும்ப விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில், வேலை போன்ற சில காரணங்களால் வெவ்வேறு இடங்களில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சமூக வலைத்தளம் மூலம் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வகையில் டிஜிட்டல் உலகில் உயர்தர பாதுகாப்புடன் கூடிய புதிய ஒருங்கிணைந்த சமூக வலை தளம் ஒன்றை ZOHO நிறுவனம் உருவாக்கியுள்ளது. Zillum என பெயரிடப்பட்ட அந்த மென்பொருள் தயாரிப்பானது, குடும்ப தகவல்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குடும்பத்திற்கென தனி இ-மெயில், உடனடி மெசேஜிங் வசதி, தரவுகள் சேமிப்பு தளம், பாஸ்வோர்ட் பாதுகாப்பு, திட்டப்பணிகள் ஒருங்கிணைப்பு, குடும்ப நிகழ்வுகளை திட்டமிடுதல் என ஒரு குடும்ப கிளவுட் சேவையை இது தரவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மென்பொருள் தற்போது சோதனை பதிப்பில் (பீட்டா வெர்ஷனில்) உள்ளது. விரைவில் முழுமையடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Zillum குறித்து சோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் Zillum என்பதற்கான பெயர் காரணத்தை விளக்கியுள்ளார். மேலும், ZOHO +இல்லம் (Illam) என்ற சேர்க்கையே Zillum ஆகியிருக்கிறது. தமிழ் வார்த்தையான இல்லத்தை, ஆங்கிலத்தில் ZOHO நிறுவனத்தின் Z என்ற ஆங்கில முதல் எழுத்துடன் இணைத்து இந்த சமூகவலைதளத்தின் பெயர் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த சமூக வலைதளத்தின் பயன்பாடு குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின், தென்காசியைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு  ZOHO நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் ZOHO நிறுவனத்தை கடந்த 1996ம் ஆண்டு தனது சகோதரருடன் இணைந்து தொடங்கினார். இன்று பல பன்னாட்டு நிறுவனங்களை மிஞ்சும் வளர்ச்சியை ZOHO நிறுவனம் கண்டுள்ளது. ஸ்ரீதர் வேம்புக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Social Media
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment