ஜோமாட்டோ ப்ரோ ப்ளஸ் அன்லிமிடெட் இலவச விநியோகங்களுடன் அறிமுகம்!

Zomato Pro Plus membership announced unlimited free deliveries Tamil News இலவச அன்லிமிடெட் விநியோகத்தைத் தவிர, பயனர்கள் Zomato Pro மெம்பர்ஷிப்பின் அனைத்து நன்மைகளையும் பெறுகிறார்கள்.

Zomato Pro Plus membership announced unlimited free deliveries Tamil News
Zomato Pro Plus membership announced unlimited free deliveries Tamil News

Zomato Pro Plus membership announced unlimited free deliveries Tamil News : ஜோமாட்டோ ப்ரோ பிளஸ் மெம்பர்ஷிப் தொடங்கப்பட்டிருக்கிறது. இது, தற்போது பயன்பாட்டில் தெரியும். புதிய உறுப்பினர்களுக்கு அன்லிமிடெட் இலவச விநியோகங்கள் மற்றும் பிற சலுகைகளை வழங்குகிறது. இருப்பினும், இது ஒரு குறிப்பிட்ட கால சலுகை மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஜொமாட்டோவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், ப்ரோ பிளஸ் உறுப்பினர் அறிமுகத்தை ட்விட்டரில் அறிவித்தார். மேலும், இது ஒரு ‘அழைப்பு மட்டுமே’ சேவையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். ஜொமாட்டோ ப்ரோ பிளஸ் உறுப்பினருக்கான அளவுகோல்களை நிறுவனம் குறிப்பிடவில்லை என்றாலும், உணவை ஆர்டர் செய்ய அதிகமாகப் பயன்பாட்டைப் பயன்படுத்துபவர்களுக்கு அல்லது ப்ரோ உறுப்பினராக இருப்பவர்களுக்கு இது கிடைக்கலாம்.

“Zomato Pro Plus என்பது Zomato Pro- வின் அழைப்பு -மட்டுமே மேம்படுத்தல் ஆகும். இது Zomato-ல் நீங்கள் உணவை ஆர்டர் செய்யும் போது டெலிவரி மற்றும் எழுச்சி கட்டணம் இல்லாமல் அனைவரையும் உள்ளடக்கிய உறுப்பினர் திட்டத்தை வழங்குகிறது” என்று பயன்பாட்டின் FAQ பிரிவு வலியுறுத்துகிறது. “நாங்கள் ஒவ்வொரு நாளும் அதை அதிக பயனர்களுக்கு வெளியிடுகிறோம். நீங்கள் ஏற்கனவே புரோ உறுப்பினராக இருந்தால், Zomato-ல் தொடர்ந்து ஆர்டர் செய்யுங்கள். தகுதியுள்ளவராக இருந்தால் உங்களுக்கு அறிவிப்பு வரும்”என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Zomato-ன் FAQ பிரிவும், ஒரு பயனர் ப்ரோ உறுப்பினராக இருந்தால், ப்ளஸ் உறுப்பினருக்கான அழைப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறுகிறது. ஜோமாடோ ப்ரோ ப்ளஸ் உறுப்பினர் சேர்க்கைக்கான அழைப்பு நமக்குத் தெரியும் மேலும், இரண்டு திட்டங்கள் இருப்பதை இது காட்டுகிறது. 12 மாத ஜொமாட்டோ ப்ரோ பிளஸ் திட்டத்திற்கு உங்களுக்கு ரூ.900 செலவாகும். அதேசமயம் 3 மாத திட்டத்தின் விலை ரூ.300 ஆகும். வருடாந்திர திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

இலவச அன்லிமிடெட் விநியோகத்தைத் தவிர, பயனர்கள் Zomato Pro மெம்பர்ஷிப்பின் அனைத்து நன்மைகளையும் பெறுகிறார்கள். ஜொமாட்டோ ப்ரோ பிளஸ் உறுப்பினர் அடிப்படையில் Zomato ப்ரோ நன்மைகளுடன் கூடுதலாக உள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.

தற்போது, ஜோமாடோ ப்ரோ உறுப்பினர் தொகை 90 நாட்களுக்கு ரூ.200 செலவாகும் மற்றும் உணவு விநியோகத்தில் 30 சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி, சாப்பாட்டுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் விரைவான விநியோகம் போன்ற சலுகைகளை உள்ளடக்கியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Zomato pro plus membership announced unlimited free deliveries tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com