சொமேட்டோ நிறுவனம் நண்பர்கள், உறவினர்களுடன் குழுவாக உணவு ஆர்ட்ர் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது. மற்றவர்களுடன் அந்த ஆர்டர் லிங்க்கை ஷேர் செய்யும் வகையில் குரூப் ஆர்டரிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
சொமேட்டோவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபிந்தர் கோயல், லிங்க்டின் தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். "உணவு ஆர்டர் செய்யும் போது நீங்கள் இப்போது உங்கள் நண்பர்களுடன் லிங்கைப் பகிரலாம்.
அவர்களும் இதே லிங்கில் உணவு ஆர்டர் செய்யலாம். ஒரே வீட்டில் ஒன்றாக ஆர்டர் செய்யும் குரூப் ஆர்டர் அம்சத்தை விரைவாகவும் எளிதாகவும் செய்யலாம்" என்று கோயல் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“