/indian-express-tamil/media/media_files/2025/09/08/nubia-air-2025-09-08-15-18-56.jpg)
மழை, தண்ணீர், தூசிக்கு இனி 'டாட்டா'... ஏ.ஐ. வசதியுடன் நுபியா ஏர் ஸ்மார்ட்போன் அறிமுகம்!
ஸ்மார்ட்போன் சந்தையில், சாம்சங் நிறுவனத்திற்குப் போட்டியாக, ZTE நிறுவனம் ஒரு அதிரடி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் மிக மெல்லிய போன்களில் ஒன்றான ‘நுபியா ஏர்’ (Nubia Air), அட்டகாசமான அம்சங்களுடன் பெர்லின் கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அசர வைக்கும் வடிவமைப்பு & விலை
நுபியா ஏர் ஸ்மார்ட்போன் வெறும் 5.9 மி.மீ. மெல்லிய வடிவமைப்புடன் வெளியாகி, பயனர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. வெறும் 172 கிராம் எடை மட்டுமே கொண்டது. இதன் விலை சுமார் ரூ.24,600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பாவில் இந்த மாதமும், பிற நாடுகளில் இந்த ஆண்டு பிற்பகுதியிலும் கிடைக்கும்.
6.78-இன்ச் AMOLED திரையுடன், 120Hz புதுப்பிப்பு விகிதம் மற்றும் 4,500 நிட்ஸ் உச்சபட்ச பிரகாசத்துடன், இதன் காட்சி அனுபவம் வேற லெவலில் இருக்கும். Unisoc T8300 சிப்செட் மற்றும் 8 ஜிபி ரேம் கொண்ட இந்த போன், அதிக செயல்திறனை வழங்குகிறது. இதில் உள்ள AI தொழில்நுட்பம், தேவையற்ற செயலிகளை முடக்கி, பேட்டரி ஆயுளை 20% வரை அதிகரிக்கிறது.
அதிநவீன கேமரா: பின்புறத்தில் 50 mp முதன்மை சென்சார் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. முன்புறத்தில், 20mp கேமரா இருப்பதால், செல்பிக்கள் மிகவும் துல்லியமாக இருக்கும். IP68, IP69, மற்றும் IP69K போன்ற 3 பாதுகாப்பு சான்றிதழ்களுடன், மழை, நீர் மற்றும் தூசியால் இந்தப் போன் பாதிக்கப்படாது. அழைப்புகளின்போது லைவ் மொழிபெயர்ப்பு, தேவையற்ற சத்தத்தை நீக்கும் வசதி என பல புதுமையான AI அம்சங்கள் இதில் உள்ளன. மொத்தத்தில், நுபியா ஏர் ஸ்மார்ட்போன், அதன் மெல்லிய வடிவம் மற்றும் அசத்தலான அம்சங்களால், பட்ஜெட் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை ஒரே நேரத்தில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.