சியா விதைகளின் நன்மை பற்றி பல்வேறு ஆய்வு நடத்தப்படிருக்கிறது. இந்நிலையில் விலங்களிலிருந்து கிடைக்கும் புரோட்டின் சத்தைவிட இதில் அதிகமான புரோட்டீன் சத்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக முட்டை, மாசிசம் ஆகியவற்றில் புரோட்டின் சத்து இருக்கிறது. இதைவிட சியா விதைகளில் அதிக புரோட்டீன் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றனர்.
புரோட்டீன் சத்து என்பது உடலில் உள்ள சதைகளை பாதிப்பிலிருந்து சீராக்குகிறது. இந்நிலையில் 100 கிராம் சிக்கன், ஆட்டின் மாமிசத்தில் 26 கிராம் புரோடீன் இருக்கிறது. இதுவே 100 கிராம் சீயவிதைகளில் 17 கிராம் புரோட்டீன் இருக்கிறது.
ஆனால் சியா விதைகளில் 10 வகையான அமினோ ஆசிட் இருக்கிறது. இந்நிலையில் சியா விதைகளில் இருக்கும் புரோட்டீன் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதாகவும், வீக்கத்தை குறைக்கும் என்று ஆய்வின் தகவல் கூறுகிறது.
100 கிராம் முட்டை, சிக்கன், ஆட்டின் மாமிசத்தில் 22 கிராம் கொழுப்பு சத்து உள்ளது. சியா விதைகளில் 30 கிராம் கொழுப்பு இருக்கிறது. இதுபோல சியா விதைகளில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாஷியம், மெக்னீஷியம் இருக்கிறது. இந்த சத்துக்கள் விலங்கு சார்ந்த பொருட்களில் இருந்தாலும், அதன் அளவு குறைவாக இருக்கும்.
இதில் இருக்கும் எண்ணெய்யில் 60 % ஒமேகா பேட்டி ஆசிட் இருக்கிறது. இதனால் இதய ரத்த குழாய்களில் ரத்தம் உரைந்து கட்டிகள் போல் உருவாகாமல் தடுக்கிறது. இதயத்தின் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியற்றை சீராக வைத்துகொள்ள உதவும்.
இதில் இருக்கும் அதிக நார்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்கும். இந்நிலையில் நாம் முடிந்தவரை சியா விதைகளை நமது உணவில் சேர்க்க வேண்டும்.