’Chamomile’ என்று ஆங்கிலாத்தில் அழைக்கப்படும் சீமை சாமந்தியில் அதிக நன்மைகள் இருக்கிறது. இந்நிலையில் இதன் முழு நன்மைகளை பெற இதில் நாம் டீ செய்து குடிக்கலாம்.
இந்நிலையில் நமது தோல் சுருக்கங்கள் இல்லாமல், வயதாவது தெரியாமல் இருக்க உதவுகிறது. இந்நிலையில் இதில் இருக்கும் சில சத்துகள் வயிறு தொடர்பான ஜீரண பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இது ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் இதனால் ரத்ததில் உள்ள குளுக்கோஸ் அளவு குறைகிறது. மேலும் இதில் டீ செய்து குடித்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
குறிப்பாக ஆஸ்டியோபுரோசிஸ் நோய் உள்ளவர்களுக்கு, அவர்களின் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் இருக்கும் ஃளாப்போநாய்ட்ஸ் (flavonoid) நமது எலிம்பு உறுதியாக இருப்பதை உறுதி செய்கிறது.
இந்நிலையில் இதில் நமது உடலின் எதிர்ப்பு சக்தியின் விளைவாக நமக்கு வீக்கம் ஏற்படுகிறது. இந்நிலையில் இதில் இருக்கும் நன்மைகள் இந்த வீக்கத்தை குறைக்க உதவும்.
மேலும் இது தரும் புத்துணர்வு நல்ல தூக்கத்தை வரவைக்கும். தூங்குவதற்கு முன்பாக இந்த சீமை சாமந்தி டீயை குடித்தால், நன்றாக தூக்கம் வரும்.
இந்த டீயை எப்படி செய்வது?
டீக்கு தேவையான நீரை கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து இதில் சீமை சாமந்தி பூவை சேர்க்கவும். தொடர்ந்து டீ பொடியை இத்துடன் சேர்க்கவும். வேண்டும் என்றால் க்ரீன் டீ பொடியை நாம் சேர்த்துக்கொள்ளலாம். தொடர்ந்து அதில் வேண்டும் என்றால் தேன் சேர்த்து குடிக்கலாம். பால் சேர்க்க கூடாது