முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைந்த முன்னாள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.
ஈரோடு திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள விமான மூலம் கோவை வந்தடைந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக ஈரோடுக்கு செல்கிறார்.

கோவை வந்தடைந்த முதல்வருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக புறப்பட்ட அவர் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் இல்லத்திற்கு சென்று அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி உட்பட கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்