மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.
வங்கக் கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றதழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் இன்று (டிச.9) நள்ளிரவு 11.30 மணிக்கு மகாபலிபுரத்தில் கரையை கடக்கிறது. இதையடுத்து சென்னை, தழிழ்நாட்டின் வட மாவட்டங்கள், புதுச்சேரி, ஆந்திராவின் கடற்கரையோர மாவட்டங்கள் முதல் பெங்களூரு வரை மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன.
Advertisment
இந்த நிலையில், புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துவருகிறது. பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் அய்வு நடத்தினார்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உதவி எண்
இதற்கிடையில், இ.சி.ஆர்-ல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
Advertisment
Advertisements
முன்னதாக மின்சார வாரியம் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், புயல் காற்று அதிகம் வீசும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும். இவ்வாறு துண்டிக்கப்பட்ட மின்சாரம் 2 மணி நேரத்தில் மீண்டும் கிடைத்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் புயல் காரணமாக நாளைய தினம் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/