`கில்லி` புகழ் நகைச்சுவை நடிகர் மாறன் கொரோனாவால் மரணம்!

விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில், ஆதிவாசி ரோலில் நடித்து ஹிட் ஆனவர் நடிகர் மாறன்.

Actor Vijay’s Gilli Fame Comedian Maaran Death, Corona Tamil News : தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பது, தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இன்று காலை நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உயிரிழந்த செய்தி நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், அவரை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் மாறன் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில், ஆதிவாசி ரோலில் நடித்து ஹிட் ஆனவர் நடிகர் மாறன். அதன் பிறகாக, டிஷ்யூம், குருவி, பாஸ் என்ற பாஸ்கரன், வேட்டைக்காரன், பட்டாஸ் என, பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், வில்லனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில், இயக்குநர் பா.ரஞ்சித்தின் சர்பாட்டா பரம்பரை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், செங்கல்பட்டை அடுத்த நத்தம் பகுதியில் வசித்து வந்த நகைச்சுவை நடிகர் மாறன், கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் தென்பட, கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் மாறன் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலர் தொடர்ந்து உயிரிழந்து வருவது, தமிழ் திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Uncategorized news here. You can also read all the Uncategorized news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gilli fame aathivaasi role comedian actor maaran died corona

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com