இந்தோனேசியா நாட்டின் சுற்றுலாத் தலமான குவாளா நாமு- சென்னை இடையே நேரடி விமான சேவை நேற்று (ஆகஸ்ட் 1) தொடங்கியது. சுற்றுலாத் தலமான குவாளா நாமுவுக்கு சென்னையில் இருந்து செல்ல நேரடி விமான சேவை இல்லை. அதனால் பயணிகள் மலேசியா அல்லது சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்று, அங்கு இருந்து இணைப்பு விமானங்கள் மூலம் குவாளா நாமுவுக்கு சென்று வருகின்றனர்.
அதே போல் குவாளா நாமுவில் இருந்து சென்னை வர மலேசியா, சிங்கப்பூர் நாடுகள் வழியாக தான் வரவேண்டி இருந்தது. இணைப்பு விமானங்களில் பயணம் செய்ய வேண்டியுள்ளதால் பயண நேரம் அதிகரிப்பது மட்டுமின்றி கூடுதல் செலவாகிறது என்றும் பயணிகள் தெரிவித்தனர். குவாளா நாமு சுற்றுலாத் தலமாக இருப்பதாலும், பயணிகள்
குவாளா நாமு- சென்னை இடையே நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, இந்தோனேசியா நாட்டில் உள்ள பாடிக் ஏர் விமான நிறுவனம், குவாளா நாமு - சென்னை - குவாளா நாமு இடையே தினசரி நேரடி விமான சேவையை நேற்று தொடங்கியது.
குவாளா நாமுவில் இருந்து மாலையில் புறப்படும் விமானம் இரவு 9.45 மணிக்கு சென்னை வருகிறது. சென்னையில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப்படும் விமானம் குவாளா நாமுக்கு அதிகாலை 4 மணிக்கு சென்றடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“