பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இதைத்தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் பிள்ளைகள் நினைத்ததை சாதிக்க முடியவில்லை என்று பேசினார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார். இந்நிலையில் நாளை இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை கிறிஸ்துவ கல்லூரி விழாவில் கலந்து கொண்ட கமல் பேசியதாவது: ” நீங்கள் கேட்டுக்கொண்டதால் தமிழில் பேசுகிறேன். நான் உங்களுக்கு அறிவுரை கூற வரவில்லை. என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன். எனது இளமைக் காலத்தில், என்னோடு அனுபவத்தை பகிர பலரும் தயாராக இருந்தனர். ஆனால் அதை கேட்கும் பொருமை என்னிடம் இல்லை. இப்போது பொருமை இருக்கிறது, ஆனால் தேவைகள் மாறி இருகின்றன.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் பந்தை எப்போதும் உங்களால் சிக்சர் அடிக்க முடியாது. எல்லா வகையான பந்துகளையும் நீங்கள் எதிர்பார்க்க வேண்டும். ஒரு விஷயம் சொல்கிறேன். என்னுடைய திறமையை நீங்கள் நம்பி பாராட்டியதால், இந்த மேடையில் இருக்கிறேன். இந்த பாதையை நான் எப்படி அமைத்துக்கொண்டேன் என்று கேட்டால், அதற்கு எளிமையான வழிகள் இல்லை. வெற்றிக்கு காரணம் என்ன என்பதை யாராலும் கணித்து சொல்லிவிட முடியாது. உங்கள் ஆரிசியர்களிடம் பேசிக்கொண்டுந்தபோது, ’எனது பெற்றோர் என்னை என்ன ஆக வேண்டும் என்று என்னிடம் கூறவில்லை. அதை எதிர்ப்பக்கவில்லை என்பதால் நான் இப்படி வளர்ந்துள்ளேன்” என்று கூறினேன்” என்று அவர் கூறினார்.