நாம் உடல் எடையை குறைக்க பல முயற்சிகள் எடுத்திருப்போம். ஆனால் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளால் நாம் உடல் எடையை குறைக்க இயலாமல் போகிறது.
கண்கவரும் டயட் பிளான்களை நாம் அதிரடியாக கடை பிடிக்க கூடாது. மேலும் உங்கள் ஊரில் கிடைக்காத ஒன்றை வைத்து நாம் டயட் பிளானை நாம் எப்போதும் தீர்மானிக்க கூடாது. குறிப்பாக அவக்கடோ போல உணவுகளை நாம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவதால் எந்த பலனும் இல்லை.
காலை உணவை நாம் கைவிடுவதால், எந்த உபயோகமும் இல்லை. இதனால் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும். மேலும் தலைச் சுற்றல், சோர்வு, குறைந்த ரத்த அழுத்தம், மற்றும் ரத்தம் உடல் முழுக்க செல்வதில் சிக்கல்ம் ஏற்படும்.
மேலும் முடிந்தவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இதனால் உடல் எடை கூடலாம். மேலும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் தெரியாமல் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கலாம்.
மேலும் வெறும் டயட் இருந்தால் உடல் எடை குறையும் என்று நம்புவது தவறு. உடல் உழைப்பு மிகவும் முக்கியம். காலை முதல் இரவு வரை உட்கார்ந்தே வேலை செய்துவிட்டு வெறும் உணவுக் கட்டுபாட்டால் மட்டும் உடல் எடை குறைந்துவிடாது.
இந்நிலையில் தினமும் 40 முதல் 50 நிமிடங்கள் வரை உடல் பயிற்சி செய்ய வேண்டும். அதிகபடியான உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. ஆனால் நிச்சயம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது உடல் பயிற்சி செய்தே ஆக வேண்டும்.