விமான விபத்து துயர சம்பவம் நடந்ததை அடுத்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு பணியாளர்கள் உட்பட 72 பேருடன் எட்டி ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான ஏடிஆர் 72 விமானம் நேபாளத்தின் பொக்காராவில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 68 பேர் உயிரிழந்தனர். முதற்கட்ட தகவல்களின்படி, 68 பயணிகளுடன் இருந்த விமானம், காத்மாண்டுவில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொக்காராவுக்கு புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, விபத்து நடந்த இடத்தில் இருந்து புகை வெளியாவது சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்கள் மூலம் தெரிகிறது. இந்த விமானம் பொக்ராவில் விழுந்து நொறுங்குவதற்கு சில நொடிகளுக்கு முன்னர் அந்த விமானம் பறந்து சென்றபோது பதிவான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
எட்டி ஏர்லைன்ஸின் ஏடிஆர் 72 ரக விமானம் இன்று #நேபாளத்தில் உள்ள பொக்காராவில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை காத்மாண்டுவில் இருந்து பொக்காராவுக்குப் பறந்து சென்றது. பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விமானத்தில் 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர்.
இந்த துயர சம்பவத்தை அடுத்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன், பர்தாவுலா, “யாராவது உயர்பிழைத்துள்ளார்களா என்பது இப்போது எங்களுக்குத் தெரியாது” என்று கூறியதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"